'தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி' : பா.ஜ., செயற்குழுவில் அமித் ஷா பேச்சு Dinamalar
பதிவு செய்த நாள் :
'தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி'
பா.ஜ., செயற்குழுவில் அமித் ஷா பேச்சு

''கர்நாடகா, தமிழகத்தில், அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும்,'' என, கட்சியினருக்கு, பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.


மோடி, அமித்ஷா, பா.ஜ., வெற்றி

மத்தியில் ஆளும், பா.ஜ.,வின் இரண்டு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம், டில்லியில் நேற்று துவங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள், கட்சியின் மாநிலத் தலைவர்கள், மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமித் ஷா பேசியது குறித்து, மத்திய ராணுவ அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன், நிருபர்களிடம்

விளக்கினார்.

கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:

இந்தாண்டு இறுதியில், பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கஉள்ளது. தற்போது, 19 மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.லோக்சபா தேர்தலில், இந்த மாநிலங்களில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். எந்தெந்த மாநிலங்களில், இரண்டாவது இடத்தில் கட்சி உள்ளதோ, அங்கு, ஆளுங்கட்சிகளுக்கு எதிரான மக்களின் மனநிலையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கர்நாடகா, தமிழகத்தில், அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும்.கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலை விட, அதிக இடங்களில், வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

'யாராலும் வெல்ல முடியாத பா.ஜ.,என்ற கோஷத்துடன் களமிறங்குவோம்.கடந்த நான்கரை ஆண்டுகளில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தியுள்ள மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும், அரசின் சிறந்த நிர்வாகம் குறித்தும்

Advertisement

மக்களிடையே பிரசாரம் செய்ய வேண்டும்.இந்தியாவை ஒருமைப்படுத்தும் பணியில், பா.ஜ., ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில், இந்தியாவை பிளவுபடுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியின் பொய் பிரசாரங்களுக்கு, தகுந்த புள்ளி விபரங்கள், ஆதாரங்களுடன் சரியான பதிலை அளிக்க வேண்டும்.கடந்த, நான்கு ஆண்டுகளில், பா.ஜ.,விடம் தோல்வி அடைந்த கட்சிகள் இணைந்து, மிகப் பெரிய கூட்டணியை அமைப்பதாகக் கூறியுள்ளன. இது ஒரு கண்துடைப்பு நாடகமே. இந்த நாடகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அமித் ஷா பேசினார்.- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தலைவா - chennai,இந்தியா
09-செப்-201822:58:13 IST Report Abuse

தலைவா இந்தியாவை சிறுமைப்படுத்தும் பணியில், பா.ஜ., ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில், இந்தியாவை பிளவுபடுத்தும் முயற்சியில் அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளது.தற்போது, 19 மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.லோக்சபா தேர்தலில், இந்த மாநிலங்களில் ஆளுங்கட்சிகளுக்கு எதிரான மக்களின் மனநிலையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 'யாராலும் வெல்ல முடியாத பா.ஜ., என்கிற கோஷம் இப்போதைக்கு இது ஒரு கண்துடைப்பு நாடகமே. இந்த ஓரங்க நாடகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அமித் ஷா பேசினார்

Rate this:
இட்லி நேசன் - Dublin,அயர்லாந்து
09-செப்-201822:23:30 IST Report Abuse

இட்லி நேசன்நீங்க தமிழ்நாட்டில ஜெயிப்பீங்களோ தோற்பீங்களோ எங்களுக்குத் தெரியாது. ஆனால் தேர்தல் நேரத்துல கருப்பு பலூன் வியாபாரிகள் மற்றும் youtube சேனல்களின் தொழில் பிச்சிக்கும்.

Rate this:
Samir - Trichy,இந்தியா
09-செப்-201818:50:38 IST Report Abuse

Samirtampered EVM இருக்குற வரைக்கும் நீங்க அமெரிக்காவுல கூட ஜெயிக்கலாம். ஜமாய்ங்க

Rate this:
jagan - Chennai,இந்தியா
09-செப்-201821:54:33 IST Report Abuse

jaganஎப்பிடி காங்கிரஸ் வாஜ்பாய் அரசை ஜெயிச்ச மாதிரி..ஹா ஹா...

Rate this:
மேலும் 48 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X