சி.பி.ஐ., சோதனை: முதல்வருக்கு நெருக்கடி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சி.பி.ஐ., சோதனை: முதல்வருக்கு நெருக்கடி

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், சி.பி.ஐ., சோதனை நடத்தியதை தொடர்ந்து, அவரை நீக்க வலியுறுத்தி, முதல்வருக்கு பல்வேறு தரப்பினரும், நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அமைச்சர் பதவியிலிருந்து விலக, விஜயபாஸ்கர் மறுத்து வருவதால், முதல்வர் தவித்து வருகிறார்.

சி.பி.ஐ.சோதனை, நெருக்கடி, முதல்வர் பழனிசாமி


தேர்தல் ரத்து :

தமிழக சுகாதார துறை அமைச்சராக இருப்பவர், விஜயபாஸ்கர். இவர், 2013ல், எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, சட்டசபையில், கருணாநிதி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை, கடுமையாக விமர்சித்து பேசினார். அவரது பேச்சு, அப்போதைய முதல்வர், ஜெயலலிதாவை பெரிதும் கவர்ந்தது.அதைத் தொடர்ந்து, விஜயபாஸ்கரை அமைச்சராக்கினார். தொடர்ந்து, சுகாதார துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்த துறையில், பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி, வேகமாக செயல்படுத்தி வருகிறார்.ஜெயலலிதா மறைவுக்கு பின், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை, எதிர்க்கட்சிகள் கிளப்பின. சசிகலா குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த

விஜயபாஸ்கர், கூவத்துாரில், எம்.எல்.ஏ.,க்களை தக்கவைக்க, பெரிதும் உதவியாக இருந்தார்.முதல்வர் பழனிசாமியும், தினகரனும் இணைந்து செயல்பட்ட நேரத்தில், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்தது. அப்போது, தினகரன் போட்டியிட்டார். தேர்தல் பொறுப்பாளராக, விஜயபாஸ்கர் தான் பணியாற்றினார். அப்போது நடந்த பணப் பட்டுவாடா காரணமாக, தேர்தல்ரத்து செய்யப்பட்டது.

லஞ்ச புகார் :

இதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள், விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினர்.அப்போது, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது தொடர்பாக, அவர் எழுதி வைத்திருந்த ஆவணங்கள் சிக்கின. அதைத் தொடர்ந்து, 'அவர், அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின; ஆனால், அவர் கண்டுகொள்ளவில்லை.அதன்பின், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 'குட்கா' போதை பொருளை விற்பனை செய்ய, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு, குட்கா வியாபாரிகள், லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. அப்போதும், விஜய பாஸ்கர் ராஜினாமா செய்ய முன்வரவில்லை.இந்நிலையில், குட்கா வழக்கு, நீதிமன்ற உத்தர வின்படி, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. இரு தினங்களுக்கு முன், சி.பி.ஐ.,அதிகாரிகள், குட்கா வழக்கு தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் அதிகாரிகள் வீடுகளில், திடீர் சோதனை நடத்தினர்.பதவியில் இருக்கும் அமைச்சர்

Advertisement

வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள், சி.பி.ஐ., அதிகாரிகள் என, அடுத்தடுத்து சோதனை நடத்தியது, அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. 'குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான, அமைச்சர் விஜயபாஸ்கர், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில், அமைச்சர் பதவியிலிருந்து, முதல்வர் நீக்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி துாக்கியுள்ளன.

தவிப்பு :

சமூக வலைதளங்களிலும், அவருக்கு எதிராக, மக்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 'அரசுக்கும், கட்சிக்கும் கெட்டப் பெயர் ஏற்படுவதால், விஜயபாஸ்கரை நீக்குங்கள்' என, சக அமைச்சர்களும், முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளனர். அனைத்து தரப்பிலிருந்தும் நெருக்கடி வருவதால், அவரை பதவி விலகும்படி, முதல்வர் கூறியுள்ளார். ஆனால், அவரோ மறுத்துள்ளார். இப்பிரச்னையில், அடுத்து என்ன முடிவெடுப்பது என தெரியாமல், முதல்வர் தவித்து வருவதாக கூறப்படுகிறது.- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-செப்-201822:00:52 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்//சமூக வலைதளங்களிலும், அவருக்கு எதிராக, மக்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்// அவ்வளவு திமிராகி விட்டதா மக்களுக்கு. கிரிஜாவிடம் சொல்லி என்கவுண்டர் பண்ண வைக்கலாமே.. போலீசை விட்டு எல்லாரையும் தூக்கி தேசத்துரோக வழக்கு போட்டு நொங்கு எடுக்கலாம்.. அமைச்சர் பொன்வண்டுவை விட்டு சமூக விரோதிகள் எக்கச்சக்கம் ஆகி விட்டார்கள் என்று சொல்ல சொல்லலாமே?. எச் ராஜாவை விட்டு எல்லாரையும் விபசாரிகளின் பிள்ளைகள் என்று விஷம் கக்க வைக்கலாமே.?. தமிழிம்சையை விட்டு எல்லோருடைய பின்புலத்தையும் பூதக்கண்ணாடி வெச்சி பாக்க சொல்லலாமே? மணல் கொள்ளையர்களை விட்டு லாரி ஏத்தி கொல்ல சொல்லலாமே? எல்லாத்தையும் விட சுலபமா ஒண்ணு செய்யலாம்.. .

Rate this:
R Sanjay - Chennai,இந்தியா
09-செப்-201814:00:53 IST Report Abuse

R Sanjayவிஜயபாஸ்கரை நீக்கினால் இந்த அரசே காணாமல் போய் விடும் இங்கு இருப்பவர்கள் அனைவருமே ஊழல் குற்றவாளிகள். மத்திய பிஜேபி அரசு இந்த ஆட்சியை கலைக்காதவரை இந்த அரசாங்கத்தில் யாருடைய பவரையும் யாரும் புடுங்க முடியாது எங்கும் ஊழல் மழை தான்.

Rate this:
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
09-செப்-201810:23:34 IST Report Abuse

பாமரன்இப்போது தான் வருமான வரி சிபிபிபீ சோதனை முடிஞ்சிருக்கு...??? இதுக்கு பயந்து கல்லா கட்டினால் சேகர் ரெட்டி ராம் மோகன் ராவ் பெல்லாரி ரெட்டி அன் கோ மாதிரி கண்டுக்காம விடப்படும். இல்லைன்னா அமலாக்க துறை சோதனை ரத்த வங்கி சோதனைMRI scan சோதனை மாதிரி நிறைய அயிட்டங்கள் இருக்கிறது... சீக்கிரம் முடிவு பண்ணிக்கோங்க...

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X