ஆர்.டி.ஐ., அறிக்கை இழுத்தடிப்பு கர்நாடகா ஐ.ஜி., ரூபா குற்றச்சாட்டு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆர்.டி.ஐ., அறிக்கை இழுத்தடிப்பு
கர்நாடகா ஐ.ஜி., ரூபா குற்றச்சாட்டு

கோவை: ''சசிகலா தொடர்பான உயர்மட்ட குழுவின் விசாரணை அறிக்கை, தகவல் உரிமை சட்டத்தில், இதுவரை எனக்கு கிடைக்கவில்லை,'' என, கர்நாடக மாநில, ஐ.ஜி., ரூபா தெரிவித்தார்.

சசிகலா, விசாரணை அறிக்கை, ஆர்.டி.ஐ.


சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, சசிகலா மற்றும் இளவரசி, பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக, அப்போது, சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபா புகார்


தெரிவித்திருந்தார். இது குறித்த விசாரணைக்கு, உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, ஐ.ஜி., ரூபா, நிருபர்களிடம் கூறியதாவது: சசிகலா
தொடர்பான விஷயங்களில், என் கடமைகளை மட்டுமே நான் செய்தேன். அதற்காக நான் அஞ்சவில்லை. என் இடமாற்றத்தையும், நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எந்த பொறுப்பாக இருப்பினும், நான் என் கடமையை செய்வேன்.சசிகலா சிறையில் இருந்தபோது நடந்த முறைகேடு தொடர்பாக, தற்போதைய அதிகாரி, ஊழல் தடுப்பு பிரிவில் அறிக்கையை சமர்ப்பித்துஉள்ளார். அந்த அறிக்கையை, நான் பலமுறை கேட்டும், கிடைக்கவில்லை. ஆர்.டி.ஐ., எனும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்தும், இதுவரை கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக, தகவல் தொடர்பு ஆணையத்தை அணுகஉள்ளேன். தகவல் அறியும் உரிமை சட்ட கேள்விகளுக்கு, தற்போதைய அதிகாரிகள், பெரிதாக மதிப்பு அளிப்பதில்லை. மிகுந்த காலதாமதம்

Advertisement

ஏற்படுத்துவதையும், தேவையற்ற விதிமுறைகள் கூறி நிராகரிப்பதையும், வழக்கமாக கொண்டுள்ளனர். ஆர்.டி.ஐ., செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவேண்டும்.இடமாறுதல் என்பது, நேர்மையான அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு தடையாக உள்ளது. சமூக மாற்றத்தில், நேர்மையான அதிகாரிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. இடமாறுதல் வழங்குவதற்கான, நிர்ணயிக்கப்பட்ட கால அளவை, நடைமுறைபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
astromaniam - Trichy,இந்தியா
13-செப்-201816:20:22 IST Report Abuse

astromaniamச்சிகலாவுக்கு தியாகத் தலைவி சின்னம்மா என்று ஜெயா டிவியில் தினகரன் வரிக்கு வரி பிளந்து கட்டுகிறார். அந்த அம்மா அப்படி என்ன தியாகம் செய்தார்கள்.அதுபற்றி ரூபா அம்மையாரைக் கேட்டால் தெரியும்

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
09-செப்-201821:18:58 IST Report Abuse

Bhaskaranசித்துவையே சித்துவேலைக்காட்டி அமுக்கியவர்கள் சாமியைசரிக்கட்ட யோசிக்க மாட்டார்களா எல்லாம் பணம் சாமி பணம்

Rate this:
09-செப்-201811:19:27 IST Report Abuse

ஆப்புஅடப் போம்மா...பிஸ்கோத்து சந்தானம் அறிக்கையையே வெளில உடாம அதுமேல கெவுனர் உக்காந்துக்கிடிருக்காரு...இதெல்லாம் ராணுவ ரகசியம். எல்லோரும் சேஃபானப்புறம் வெளில உடுவாங்க.

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X