இதுவும் ரஜினி ஸ்டைல் தான்! Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இதுவும் ரஜினி ஸ்டைல் தான்!

உளவியல் ரீதியிலான, ரஜினியின் புதிய அணுகு முறைக்கு, அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பொது மக்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்து உள்ளது.

ரஜினி. ஆறுதல், அபிராமி, ரசிகர்

ஒருவருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்கோ அல்லது வாழ்த்து தெரிவிப்பதற்கோ, சம்பந்தப்பட்ட நபரை தேடிச் சென்று சந்திப்பது வழக்கம். ஆனால், பாதிக்கப்பட்டவர்களை அல்லது பாராட்ட வேண்டியவர்களை, தன் வீட்டிற்கு அழைத்து சந்திப்பதை, நடிகர் ரஜினி வழக்கமாக்கி உள்ளார்.அந்த வகையில், சாலையில் கிடந்த, 50 ஆயிரம் ரூபாய் பணத்தை, போலீசாரிடம் ஒப்படைத்த, ஈரோட்டைச் சேர்ந்த யாசின் என்ற சிறுவனை, தன் வீட்டிற்கு அழைத்த ரஜினி, தங்க சங்கிலி பரிசளித்து வாழ்த்தி அனுப்பினார்.

சென்னை அருகே குன்றத்துாரில், மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால், இரண்டு குழந்தைகளை பறிகொடுத்த, விஜய் என்பவரையும், வீட்டிற்கு அழைத்து, ரஜினி ஆறுதல் கூறினார். தன் மக்கள் மன்றத்தில்,இளைஞரணி பொறுப்பையும், அவருக்கு வழங்கினார்.காலா பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்தபோது, விபத்தில் கால்களை இழந்த ரசிகர், காசி விஸ்வநாதனை அழைத்து, ஆறுதல் கூறினார். செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட அவரை, உற்சாகப்படுத்தி அனுப்பினார்.நாகர்கோவிலில், மூளைச்சாவு அடைந்த, சிறுவனின் பெற்றோரை அழைத்து, ஆறுதல் கூறினார். கோத்தகிரி அடுத்த, ஓடந்துரை ஊராட்சியை, சிறப்பாக மாற்றியதற்காக, முன்னாள் ஊராட்சி தலைவரை அழைத்தும் வாழ்த்தினார்.இதுபோன்று, பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாதனை புரிந்தவர்களை, ரஜினி நேரில் அழைத்து பேசுவது, உளவியல் ரீதியான நடவடிக்கை என்கின்றனர், மனநல மருத்துவர்கள்.

இது குறித்து, திருச்சியைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஒருவர் கூறியதாவது:நடிகர் ரஜினி, ஆன்மிகத்தில் நம்பிக்கை உடையவர். அவரின் அறை முழுவதும், ஆன்மிக பெரியவர்களின் படம் நிரம்பி இருக்கிறது. அந்த அறைக்கு

Advertisement

சென்றால், நிச்சயம், மனரீதியாக அமைதியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.ஏதாவது பிரச்னையால் பாதிக்கப்பட்டவர், மன உளைச்சலில் இருப்பார். தன் வீட்டில் இருந்து வெளியேறினால், அவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். இவையெல்லாம் மனதில் வைத்தே, ஆன்மிகத்தில் அதிகம் நாட்டம் உடைய ரஜினி, அவர்களை வீட்டிற்கு அழைத்து பேசுவதை வழக்கமாக்கி இருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.ரஜினியின், இந்த உளவியல் ரீதியான நடவடிக்கை, ரசிகர்கள் மட்டுமின்றி, பொது மக்கள் மத்தியிலும், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-செப்-201809:08:31 IST Report Abuse

இந்தியன்... விவசாயி மகன்ரஜினி நல்ல மனிதர்

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
10-செப்-201816:19:46 IST Report Abuse

இந்தியன் kumarதன மனதுக்கு சரி என்று பட்டதை சரியாக செய்ய கூடியவர் , அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் நேரிடையாக செல்வர் ,

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
10-செப்-201816:17:17 IST Report Abuse

இந்தியன் kumarரஜினி நல்லவர் , இறைவன் அருள் அவருக்கு நிச்சயம் உண்டு , தமிழக மக்கள் பேர் ஆதரவினால் நிச்சயம் நல்லாட்சி கிடைக்கும்.

Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X