தேக்கு மரக்கடத்தல் வழக்கு: புதுச்சேரி தொழிலதிபர் கைது| Dinamalar

தேக்கு மரக்கடத்தல் வழக்கு: புதுச்சேரி தொழிலதிபர் கைது

Added : செப் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement



புதுச்சேரி, செப்.9-
களக்காடு புலிகள் சரணாலய தேக்கு மர கடத்தல் வழக்கில், புதுச்சேரி தொழிலதிபரை, வனத்துறை அதிகாரிகள் கைது செய்து, ஒரு டன் தேக்கு மரங்களை பறிமுதல்
செய்தனர்.
நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் சரணாலயம் பகுதியில், வனத்துறைக்கு சொந்தமான தேக்கு மரங்களை வெட்டி கடத்தியதாக, வனத்துறை ஊழியர் முருகன் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக, வனத்துறை சரகர், நெல்லை விநாயகம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடத்தப்பட்ட தேக்கு மரங்களை, புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர்
கார்த்திகேயன் வாங்கி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, 20க்கும் மேற்பட்ட வனத்துறை காவலர்கள் நேற்று புதுச்சேரி வந்தனர். லாஸ்பேட்டையில் தொழிலதிபரை கைது செய்த அவர்கள், மறைத்து வைக்கப்பட்டு இருந்த, 1 டன் மதிப்புள்ள தேக்கு மரத் துண்டுகளை கைப்பற்றி, புதுச்சேரி வனத்துறையில் வைத்தனர்.பின், கார்த்திகேயனை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்றனர். வழக்கு, தமிழக பகுதியில் சம்பந்தப்பட்டு இருப்பதால், குற்றவாளியை தமிழக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என, கோர்ட் அறிவுரை வழங்கியது.
இதையடுத்து, கார்த்திகேயன் நெல்லை கொண்டு செல்லப்பட்டு, இன்று பாளையங்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
09-செப்-201811:59:55 IST Report Abuse
Devanatha Jagannathan அறுபது வருஷமா ஆயிரக்கணக்கான டன் மரங்களை அதிகாரிகளும் அரசியவாதிகளும் சேர்ந்து ஆட்டையை போட்டுட்டாங்க. இப்போ ஒரு அப்பாவியை வீரமா பிடிச்சுடீங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X