உணவு பொருள் விலையை குறைக்க விமான நிலையங்களுக்கு உத்தரவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உணவு பொருள் விலையை குறைக்க விமான நிலையங்களுக்கு உத்தரவு

Added : செப் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதுடில்லி:எம்.ஆர்.பி., எனப்படும், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையில் தண்ணீர் பாட்டில்கள், உணவுப் பொருட்களை விற்க வேண்டும் என, விமான நிலையங்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான விமான நிலையங்களை, இந்திய விமான நிலைய ஆணையமே நிர்வகிக்கிறது. அதே நேரத்தில் சில விமான நிலையங்கள், தனியாரால் நிர்வகிக்கப்படுகிறது.
விமான நிலையங்களில், தண்ணீர் பாட்டில் மற்றும் உணவுப் பொருட்கள் மிகவும் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
அதையடுத்து, அரசு நிர்வகிக்கும் விமான நிலையங்களில், எம்.ஆர்.பி., விலையில், தண்ணீர் பாட்டில் மற்றும் உணவுப் பொருட்களை விற்பதற்காக தனி கவுன்டர் அமைக்க வேண்டும் என, விமான நிலைய இயக்குனர்களுக்கு, இந்திய விமான நிலைய ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.மேலும், அடுத்த நிதியாண்டில் இருந்து, இதற்காக டெண்டர் விட வேண்டும் என்றும், அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:விமான நிலையங்களில், உணவுப் பொருட்கள் மிகவும் அதிக விலைக்கு விற்பதாக, தொடர்ந்து புகார்கள் வந்தன.
சென்னை, சிம்லா மற்றும் புனேயில், குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்ய, தனியாக கவுன்டர்கள் உள்ளன.இதேபோல், நாடு முழுவதும், குறைந்த விலையில் உணவுப் பொருட்களை விற்பதற்காக, தற்போது அனைத்து விமான நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், டில்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் கொச்சி போன்ற, தனியாரால் நிர்வகிக்கப்படும், விமான நிலையங்களுக்கு இந்த புதிய உத்தரவு பொருந்தாது.சில விமான நிலையங்களில், போதுமான உணவகங்கள் இல்லை என்ற புகாரும் வந்துள்ளது. அங்கு, கூடுதல் வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Meenu - Chennai,இந்தியா
09-செப்-201811:46:32 IST Report Abuse
Meenu பெட்ரோல் விலையை ஏத்திக்கிட்டே போவதால் தான் பொருட்களின் விளையும் ஏறிக்கிட்டே போகுது. முதலில் பெட்ரோல் விலையை குறைங்க, அப்புறம் அடுத்தவங்களுக்கு உத்தரவு போடுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X