இனப்பெருக்க குழியாக காட்சியளிக்கும் அணை: குண்டேரிப்பள்ளத்தில் மீன்கள் மடிய வாய்ப்பு| Dinamalar

தமிழ்நாடு

இனப்பெருக்க குழியாக காட்சியளிக்கும் அணை: குண்டேரிப்பள்ளத்தில் மீன்கள் மடிய வாய்ப்பு

Added : செப் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோபி: பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு, போதிய மழையின்றி, குண்டேரிப்பள்ளம் அணை நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் மீன்கள் செத்து மடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோபி, கொங்கர்பாளையம் கிராமத்தில், குண்டேரிப்பள்ளம் அணை அமைந்துள்ளது. முழு கொள்ளளவான, 42 அடி தண்ணீரில் உற்பத்தியாகும் மீனுக்கு எப்போதும் மவுசு அதிகம். கடந்த, 2013 முதல், 2017 வரை, தனியார் குத்தகைதாரர், முறையாக குத்தகை செலுத்தவில்லை. இதனால், 2017 அக்.,25 முதல், மீனவர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில், மீன் வளர்ச்சிதுறை மீன்களை பிடிக்கிறது. இவற்றில், கட்லா, லோகு, மிர்கால் ஆகிய மீன்களில், மூன்றில் ஒரு பங்கு மீனவர்களுக்கும், எஞ்சிய இரு பங்கு, மீன்வளர்ச்சி துறை மூலம் விற்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான மீன் குஞ்சுகள் விடப்படும் அணையில், இயற்கையாகவே, 'திலேப்பியா' ரக மீன்கள் வளர்கின்றன. இந்த வகை மீன்கள், நீர்நிலையின் தரையில், வட்ட வடிவில் சிறு பள்ளம் தோண்டி முட்டையிட்டு, மார்பு துடுப்புகளால் விசிறி குஞ்சு பொறிக்கும். அணை, 2017 அக்டோபரில் முழு கொள்ளளவை எட்டியது.இதனால் கடந்த மார்ச், 15 முதல், சுழற்சி முறையில், மே, 20 வரை, 42 நாட்கள் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின், நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழையின்றி, அணையை நம்பிய பாசன பகுதிகள், வறட்சியை தழுவியது.

இதனால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆக.,30 முதல் செப்.,8 வரை தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்படி, பத்து நாட்கள் கணக்கீடாக, இன்று காலையுடன் தண்ணீர் நிறுத்தப்படுகிறது. கடந்த, 10 நாளில், 20 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது, அணையில், 20 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால், மீன்கள் உற்பத்தி குறைந்து, பாதியளவே வளர்ச்சி பெற்ற மீன்களே சிக்குகிறது. நீர் இருப்பு குறைந்ததால், இனப்பெருக்கத்துக்காக திலேப்பியா ரக மீன்கள் உருவாக்கிய ஏராளமான குழிகள், அணை வளாகத்தில் வட்ட வட்டமாக காணப்படுகிறது. இதே நிலை நீடித்தால், வளர்ச்சிக்கு வழியின்றி அணையில் மீன்கள் செத்து மடிய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறியதாவது: கடந்தாண்டில் செப்., மாதத்தில், சராசரியாக 200 மி.மீ., மழை பெய்தது. நடப்பாண்டில் நீர்பிடிப்பு பகுதியில், ஒரு துளி மழையில்லை. அக்., முதல் வாரத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். அப்போது மழை பெய்தால் மட்டுமே தீர்வு உண்டு. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X