ஜாதி, பயங்கரவாதம், கம்யூனிஸ்டை அகற்ற பா.ஜ., தீர்மானத்தில் சபதம்| Dinamalar

ஜாதி, பயங்கரவாதம், கம்யூனிஸ்டை அகற்ற பா.ஜ., தீர்மானத்தில் சபதம்

Updated : செப் 09, 2018 | Added : செப் 09, 2018 | கருத்துகள் (35)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Amit Shah,BJPNationalExecutive, பா.ஜ., பாஜ, பிரகாஷ் ஜாவ்டேகர்

புதுடில்லி: வரும் 2022 ல் ஜாதி, பயங்கரவாதம், கம்யூனலிசம் அகற்ற பா.ஜ., தீர்மானத்தில் சபதம் ஏற்கபட்டுள்ளது.


டில்லியில் பா.ஜ.,வின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் நடந்து வருகிறது. இரண்டாவது நாளான இன்று முக்கிய அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

*அரசின் சாதனைகளால் எதிர்க்கட்சிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

*மோடி அரசு நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளது.

*ஆட்சிக்கு வருவதையும், மோடியை தடுத்து நிறுத்துவதையுமே எதிர்க்கட்சிகள் திட்டமாக வைத்துள்ளன.

*2022க்குள் அனைவருக்கும் வீடு உறுதி
*2022க்குள் நாட்டில் ஜாதி, பயங்கரவாதம், கம்யூனிசம் அகற்றப்படும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொண்டு வந்தார்.


2022க்குள் புதிய இந்தியா


கூட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், பாஜ., ஆளும் மாநிலங்களில் செய்யப்பட்ட பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பா.ஜ., ஆட்சியில் ஊழலிலிருந்து இந்தியா விடுதலை பெற்றுள்ளது. இந்தியா வெற்றி பெற சமூகம் உதவி செய்துள்ளது. பா.ஜ., சரியான பாதை மற்றும் கொள்கைகளை கொண்டுள்ளது. பிரதமரின் புதிய இந்தியா குறித்து கவனம் செலுத்தப்பட்டது. 2022க்குள் புதிய இந்தியா என்ற கொள்கையை எட்டுவோம்.

புது இந்தியாவானது வறுமை பயங்கரவாதத்திலிருந்து விடுபட்டிருக்கும். பெரும்பாலான மாநிலங்களில் வீழ்த்த முடியாத சக்தியாக பா.ஜ., உள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு திட்டமும் கிடையாது,தலைவரும் கிடையாது. அவர்களின் ஒரே திட்டம் மோடியை தடுத்து நிறுத்துவது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெறாது. 2019 ல் பா.ஜ., மீண்டும் வெற்றி பெறும். பிரதமர், நம்மை சரியான பாதையில் வழிநடத்தி செல்கிறார். காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
10-செப்-201801:27:55 IST Report Abuse
POLLACHI  JEAYASELVAN   sanjose USA இன்னுமா நம்புறங்கே நம்மள ?
Rate this:
Share this comment
Cancel
summathan - Chennai,இந்தியா
10-செப்-201800:07:32 IST Report Abuse
summathan Is BJP going to dissolve the party to achieve the heading.
Rate this:
Share this comment
Cancel
Gopalashamy - Srivilliputhur,இந்தியா
09-செப்-201823:06:45 IST Report Abuse
Gopalashamy ஜாதி ஒழிப்பு நல்ல முடிவு, ஜாதி ஒழிப்பு எங்கள் குறிக்கோள் என்று கூறும் திராவிட கழ(ல)கங்கள் எத்தொகுதியில் எந்த ஜாதி மக்கள் அதிகம் என்று ஆராய்ந்தே வேட்பாளர்களை தேர்வு செய்கின்றனர் தனி தொகுதி என்றால் உள்ளாட்சி அவர்களுது ஆட்சி. இப்படி எல்லா துறையிலும் ஜனநாயகம் ஜாதி ஆக , கல்வி துறையிலே இந்த சமூகத்திற்கு பாத்தியபட்ட பள்ளி என்று பல பள்ளிகள் உள்ளன இத்தகைய கூடங்களில் சமூகம் எப்படி மலரும் சாதி தான் மலரும் . ஏன் இத்தனை ஆண்டுகளில் ஒரு தாழ்த்தபட்ட சமூகத்தை சேர்ந்தவர் நம் தமிழ்நாட்டின் முதல்வராய் வர முடிந்ததா ? ஏன் திராவிட அரசியல் தலைவர்கள் நினைத்தால் சாத்தியம் தானே. இடஒதிக்கீடு கொடுப்பார்கள் ஆனால் நாற்காலியில் பங்கு கொடுப்பார்களா? புரிந்து கொள்ளுங்கள் இவர்களின் பதவி வெறிக்கு ஜாதி வேண்டும்,ஒற்றுமை கூடாது. பிஜேபி யின் இத்தகைய எண்ணம் வரவேர்க்கதக்கது.மக்கள் நினைத்தாலே இது சாத்தியம் . சுதந்திர போராட்ட வீரர்களிடம் சாதி பார்காதீர்கள் அவர்கள் சாதித்ததை பாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X