No Cheap Liquor For Overweight Coast Guard Personnel, | உடல் பருமனா? மானிய விலை மது இல்லை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உடல் பருமனா? மானிய விலை மது இல்லை

Added : செப் 09, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
உடல் பருமன், மது, கடலோர காவல்படை

புதுடில்லி: அதிக எடை மற்றும் உடல்பருமன் கொண்ட அதிகாரிகளுக்கு மானிய விலையில் மது வழங்கக்கூடாது என, இந்திய கடலோர காவல்படையின் வடமேற்கு பிராந்திய கமாண்டர் ராகேஷ் பால் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்த உத்தரவு அனைவருக்கும் பொருந்தும். உடல் எடை அதிகரிக்க ஆல்கஹாலுக்கு முக்கிய பங்கு உள்ளது. இதனால், உடல் எடை அதிகமுள்ள வீரர்கள் கடலில் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்க இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.சம்பந்தபட்டவர்களிடம் பல முறை உடல் எடையை குறைக்க சொல்லியும். அவர்கள் அதனை செய்யாததால், மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்கள் உடல் எடையை குறைத்தால் தான் மானிய விலை மது வழங்கப்படும். நமது பணியை கடலில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், போதிய உடல்தகுதி இல்லாததால், அவர்களை பணியமர்த்த முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ArulKrish -  ( Posted via: Dinamalar Android App )
10-செப்-201806:34:28 IST Report Abuse
ArulKrish vellaya irukaravan poi solla mataan
Rate this:
Share this comment
Cancel
09-செப்-201819:38:31 IST Report Abuse
ஆப்பு உடல் பருமனானவங்க முட்டை, கவுச்சை சாப்பிட்டா பணி நீக்கம்னு சொல்ல மாட்டீங்களா?
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-செப்-201822:08:18 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்சோத்து மூட்டைகள் தான் பருமனாக இருப்பார்கள். புரதம் அதிகம் காய்கறி கொஞ்சம் இருந்து, மாவுசத்து முற்றிலும் குறைத்தால் தொப்பை மாயமாகும். அரசி அளவுக்கு கொடுமையிலும் மாவு சாது இருக்குங்குற தகவல் கூட நம்மூரு முட்டாள் டாக்டர்களுக்கு தெரியாது. சக்கரை வியாதியா, சப்பாத்தி சாப்பிடுன்னுடுவான்....
Rate this:
Share this comment
Cancel
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
09-செப்-201819:30:58 IST Report Abuse
ديفيد رافائيل இராணுவத்தில் சேருவதே இதற்கு தான் இதுக்கும் வச்சுட்டாங்க ஆப்பு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X