'40 deaths in 75 accidents since Sept 2017 | ரயில் விபத்து: உயிரிழப்பு குறைந்தது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரயில் விபத்து: உயிரிழப்பு குறைந்தது

Updated : செப் 09, 2018 | Added : செப் 09, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ரயில் விபத்து, உயிரிழப்பு குறைந்தது,

புதுடில்லி: 2017 செப் முதல் 2018 ஆகஸ்ட் வரையான காலகட்டத்தில் 75 ரயில் விபத்துகளில், 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் நடந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இது குறைவாகும்.


புள்ளிவிவரம்

இது தொடர்பாக வெளியான புள்ளிவிவரத்தில், 2016 செப்., முதல் 2017 ஆகஸ்ட் வரை நடந்த 80 ரயில் விபத்துகளில் 249 பேர் உயிரிழந்துள்ளனர். நவம்பரில் இந்தூர் - பாட்னா எக்ஸ்பிரஸ் கான்பூர் அருகே தடம்புரண்டு 150 பேர் உயிரிழந்தனர். ஆகஸ்ட்டில், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 20 பேர் உயிரிழந்தனர். ஆகஸ்ட் மாதம் உ.பி.,யில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 13 குழந்தைகள் உயிரிழந்தனர். 2013 செப்., 2014 ஆகஸ்ட்டில் 139 ரயில் விபத்துகளில் 275 பேரும், 2014 - 15 காலகட்டத்தில் 108 விபத்துகளில் 196 பேரும் உயிரிழந்துள்ளனர் எனக்கூறப்பட்டுள்ளது.


சரிவு

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், 2013 செப்., 2014 ஆகஸ்ட் வரை காலகட்டத்தில் 62 சதவீதமாக இருந்த உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது, 2017 - 18 காலகட்டத்தில் 4 சதவீதமாக குறைந்துள்ளது. காயமடைந்தோரின் எண்ணிக்கையும் 272 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைந்துள்ளது. ரயில்கள் மோதல், தடம் புரள்வதும் 69 சதவீதத்திலிருந்து 56 சதவீதமாக குறைந்துள்ளதாக கூறினர்.


ரயில்வே கிராசிங்குகளில்...

ரயில் பாதுகாப்பில் முக்கியமாக, 2020க்குள் ஆளில்லாத ரயில்வே கிராசங்கை முற்றிலுமாக அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 2017 - 18 காலகட்டத்தில் இந்தியா முழுவதும் 1,565 ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் மூடப்பட்டன. இதனால் விபத்துகள் பெருமளவு குறைந்துள்ளன. 2018 - 19 காலகட்டத்தில் 1,600 ஆளில்லா ரயில்வே கிராசிங்கை மூட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளில் நடந்த விபத்துகளில் 2013 - 14 ல் 52 பேரும், 14 - 15 பேரும் 39 பேரும், 2015 - 16 பேரும் 23 பேரும், 2016 - 17 ல் 13 பேரும், 2017 - 18 ல் 8 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
10-செப்-201803:57:51 IST Report Abuse
Ray 2016 நவம்பரில் இந்தூர் - பாட்னா எக்ஸ்பிரஸ் கான்பூர் அருகே தடம்புரண்டு 150 பேர் உயிரிழந்தனர். 2017 ஆகஸ்ட்டில், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 20 பேர் உயிரிழந்தனர். இவையிரண்டும் வரலாற்று சாதனைகள் என்ன காரணம் என்று புள்ளி விவரங்களை சொல்லி பூசி மெழுகாமல் சொல்வார்களா?
Rate this:
Share this comment
Cancel
ديفيد رافائيل - مدری,இந்தியா
09-செப்-201822:44:32 IST Report Abuse
ديفيد رافائيل சூப்பர்
Rate this:
Share this comment
Cancel
Welcome Back to 1900AD - korkai,இந்தியா
09-செப்-201822:00:26 IST Report Abuse
Welcome Back to 1900AD எல்லாம் ஆன்லைன்.வீடியோ கால்லிங் .பயணியர் ரயில் தேவையில்லை.சரக்கு( GOODS ) ரயில் மட்டும் போதும். ரயிலின் தொடக்கமே சரக்கு ரயில்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X