ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க தமிழக அமைச்சரவை பரிந்துரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க தமிழக அமைச்சரவை பரிந்துரை

Added : செப் 09, 2018 | கருத்துகள் (95)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ராஜிவ், கொலையாளிகள், விடுதலை, தமிழகம், அமைச்சரவை

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை கவர்னருக்கு தெரிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டம் நடந்தது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் 7 பேர் விடுதலை செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:

*ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேரையும் முன் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது.

*முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு புரட்சி தலைவர் எம்ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என பெயர் சூட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க அமைச்சரவை ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு 2016 டிசம்பரில் பரிந்துரை செய்த நிலையில், மீண்டும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (95)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
10-செப்-201813:25:46 IST Report Abuse
மலரின் மகள் மரண தணடனை உறுதி செய்யப்பட்ட உடனே அதை நிறைவேற்ற வேண்டும். காலம் தாழ்த்தி கொண்டே போனது தான் தவறாக தெரிந்திருக்கிறது சட்டத்திற்கு. அதன் மூலம் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு பின்னாளில் அது ஆயுளாக குறைக்க பட்டுவிட்டது. அது ஆயுளுக்கும் பொருந்தும் என்று விளக்கம் வேறு கொடுத்தாயிற்று. அதோடு விட்டார்களா என்றால் அப்படி இல்லை. ஆயுள் தண்டனை போதும் அதற்கு 27 வருடங்கள் அதிகம். இப்போதெல்லாம் பதினைந்து வருடங்கள் பிரிமியம் செலுத்தினாலே ஆயுளுக்கும் பென்ஷன் என்பது போல, பத்து பணிநெரெண்டு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தாள் போதும் ஆயுள் தண்டனை கூட முற்றுப்பெற்று விடும் என்று கூறுவது எந்த அளவில் சரி என்று தெரியவில்லை. மரண தண்டனை தரும்போது என்ன எழுதினார்கள். அரிதினும் அரிதான வழக்காக அதுவும் தேச துரோக குற்றமாக, தேசத்திற்கு எதிராக சாதி செயல் செய்தவர்கள் என்ரீல்லாம் குற்றம் சாட்டப்பட்டு ஐயம் திரிபற நிரூபிக்கப்பட்டுவிட்டபிறகு தண்டனை வழங்க பட்டிருக்கிறது. எதோ சில காரணங்கள் அல்லது தாமதங்கள் தேசத்துரோகம் அழைத்தவர்களுக்கு சாதகமாக போவதா? உச்ச நீதிமன்றம் இறுதியாக ஒரு மாநிலத்தை தீர்மானிக்க சொல்லிவிட்டது. அப்படி இருக்கும் பொது மாநிலம் அதை நன்கு ஆய்ந்து சட்டமன்றத்தில் மீண்டும் அலசி பார்த்து விட்டு தன நிலத்தில் சாதி திட்டம் தீட்டி அதை நிரைவேற்றியவர்களே என்ன செய்யலாம் விடுதலை செய்வதா அல்லது கொஞ்சம் விளக்கு அளித்து சிறையில் மேலும் பல காலம் வைத்திருப்பதை என்று ஆய்ந்து அவர்கள் 65 வயதை கடந்த பின்னர் விடுதலை அளிப்பதை பற்றி யோசித்திருக்கலாம். இளைமை முழுதும் சிறையில் கழிக்கட்டுமே. சீனியர் சிடிஸின் ஆனபிறகு நாற்பது வருட சிறை தண்டனைக்கு பிறகு அவர்களை விடுதலை செய்திருக்கலாம். காரணம் குற்றத்தின் தன்மை அத்தகையது.
Rate this:
Share this comment
Cancel
10-செப்-201810:36:15 IST Report Abuse
ராமகிருஷ்ணன் இனத்திற்காக இரக்கம் கொள்வது மண்ணை தலையில் போட்டுக்கொள்வதை போன்றது. அதன் பலனை விரைவில் அனுபவிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-செப்-201808:02:36 IST Report Abuse
Srinivasan Kannaiya விடுங்கப்பா விடுங்கப்பா சீக்கிரமா விடுங்கப்பா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X