தமிழகம், புதுச்சேரியில் இரண்டு நாள் கனமழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரியில் இரண்டு நாள் கனமழை

Added : செப் 09, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கனமழை, தமிழகம், புதுச்சேரி

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த இரண்டு நாட்களுக்கு, கன மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், ஒரு வாரத்துக்கு மேலாக, தென் மேற்கு பருவ மழை குறைந்து, வெயிலின் அளவு அதிகரித்துள்ளது. சில இடங்களில், வெப்ப சலன மழை மட்டும் பெய்துள்ளது. இன்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், பெரம்பலுார் மாவட்டம், வெண்பாவூரில், 5 செ.மீ., மழை பெய்தது. அரியலுார், 3; பெரம்பலுார், 2; தஞ்சை மாவட்டம், பாபநாசம் மற்றும் கும்பகோணத்தில், 1 செ.மீ., மழை பதிவானது.
இந்நிலையில், மீண்டும், மேற்கு திசை காற்று வலுப்பெற துவங்கியுள்ளது. இதையொட்டி, வங்கக் கடலின், தென் மேற்கு பகுதியில் இருந்து, ஈரப்பதம் மிக்க மேகக் கூட்டங்கள் நகருவதால், தமிழக கடலோர பகுதிகளில், சில இடங்களில், அடுத்த இரண்டு நாட்கள் கன மழைக்கு வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்னு மையம் கணித்துள்ளது. மேலும், கர்நாடகா முதல், தமிழகம் வரை பரவியுள்ள மேலடுக்கு சுழற்சியால், உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suraGopalan -  ( Posted via: Dinamalar Android App )
09-செப்-201822:33:29 IST Report Abuse
suraGopalan நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும். நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்
Rate this:
Share this comment
Cancel
v sampath - CHENNAI,இந்தியா
09-செப்-201822:10:06 IST Report Abuse
v sampath வானிலை அறிக்கை மழை வருவது குறித்து நம்பிக்கை தெரிவித்தது நல்ல விஷயம் . எதிர்பார்ப்போம் மழையை ...
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
09-செப்-201821:16:49 IST Report Abuse
bal இந்த கேரளாவில் நடந்த வெள்ளத்தை காண்பித்தார்கள்...நமது குமரி அவஸ்தை பட்டதை வெளியில் சொல்லவே இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X