'மத்திய ஆய்வு அறிக்கைக்கு எதிராக வழக்கு தொடருங்க' Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'மத்திய ஆய்வு அறிக்கைக்கு எதிராக வழக்கு தொடருங்க'

சென்னை: 'ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், மத்திய அரசின் நீர் ஆய்வு அறிக்கையை எதிர்த்து, தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில், வழக்கு தொடர வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

'மத்திய ஆய்வு அறிக்கைக்கு  எதிராக வழக்கு தொடருங்க'


அவரது அறிக்கை: துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலை மூடப்பட்டு, அது தொடர்பான

வழக்குகள், நிலுவையில் உள்ளன. ஆனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக, மத்திய அரசு, நிலத்தடி நீர் ஆய்வு செய்திருப்பது, தமிழக மக்களை வஞ்சிக்கும்செயல்.மத்திய நிலத்தடி நீர் வாரியம், துாத்துக்குடி பகுதிகளில் ஆய்வு செய்த போது, உளவுத்துறை வாயிலாக, தமிழக அரசு அதை அறிந்திருந்தும், வேடிக்கை பார்த்துள்ளது.

இப்போது, மத்திய அரசின் அறிக்கை வெளிவந்த பின், ஏதோ தங்களுக்குத் தெரியாமல் நடந்தது போல், ஒரு கபட நாடகம் ஆடுகிறது.இதிலிருந்து, அ.தி.மு.க., அரசும், மத்திய அரசும், இந்த ஆலையை திறப்பதில், திரைமறைவு கூட்டணி வைத்துள்ளது என்பது தெரிகிறது.சுற்றுச்சூழலுக்கும், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளுக்கும் காரணமா

Advertisement

க இருக்கும், ஸ்டெர்லைட் ஆலை குறித்த, நீர் ஆய்வு அறிக்கையை, மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.அ.தி.மு.க., அரசு, இந்த ஆய்வு அறிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தடை பெற வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramanathan - Ramanathapuram,இந்தியா
10-செப்-201816:34:32 IST Report Abuse

ramanathanபத்தாயிரம் குடும்பங்கள் வேலைவாய்ப்பற்ற நிலையில் இருக்கிறார்களே இதற்க்கு ஸ்டாலின் மற்றும் போராட்டம் காரர்கள் இதற்க்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
10-செப்-201816:07:48 IST Report Abuse

ஆரூர் ரங்மாநிலத்திலுள்ள சூழ்நிலை சீர்கேட்டு ஆலைகள் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றினால் நான் எதிர்த்துப் போராடமாட்டேன் என சுடலை சத்தியம் செய்வாரா? கட்சியே கலகலத்துவிடும் .முழுக்க திருட்டுகூட்ட்டம்

Rate this:
murali - Chennai,இந்தியா
10-செப்-201811:29:48 IST Report Abuse

muraliஸ்டாலின் நள்ளிரவில் நீதி மன்றத்தை கூட்டிய மாவீரன், தளபதி, அஞ்சாநெஞ்சன், இதற்கு ஏன் கூட்டமாட்டேன் என்கிறார். புரியவில்லை.

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X