இன்று பந்த்; காலாண்டு தேர்வு பாதிக்குமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று பந்த்; காலாண்டு தேர்வு பாதிக்குமா?

Added : செப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை:தமிழகம் முழுக்க, காலாண்டு தேர்வு இன்று துவங்கவுள்ள நிலையில், 'பந்த்' அறிவிப்பால், பெற்றோர் கலக்கமடைந்துள்ளனர்.பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று முதல், வரும் 22ம் தேதி வரை, காலாண்டு தேர்வு நடக்கிறது. காலை 10:00 முதல் மதியம், 12:30 மணி வரை, அந்தந்த பள்ளிகளில், தேர்வு நடக்கிறது. இதற்கான வினாத்தாள், மாவட்ட தேர்வு நோடல் மையங்களில் இருந்து, அந்தந்த பள்ளிகளுக்கு, நேற்று அனுப்பப்பட்டன.இந்நிலையில், இன்று, தி.மு.க., மற்றும் காங்., கட்சிகள் சார்பில், எரிபொருள் விலை உயர்வை கண்டித்து, பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப்பேருந்துகள் இயங்கினாலும், கூட்டநெரிசல் காரணமாக, மாணவர்கள் தேர்வுக்கு உரிய நேரத்தில் செல்வதில் சிரமம் ஏற்படும் என, பெற்றோர் கவலையடைந்துள்ளனர்.மாவட்ட கல்வி அலுவலர் (நகர்) கீதா கூறுகையில், ''பள்ளிகள் இன்று வழக்கம் போல் இயங்கும். பேருந்து வசதி இல்லாததால், சற்று தாமதமாக மாணவர்கள் வந்தாலும், தேர்வு எழுத தடை விதிக்கப்பட மாட்டாது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X