தண்ணீரும் இல்லை...தொட்டிகளும் சுத்தமில்லை!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீரும் இல்லை...தொட்டிகளும் சுத்தமில்லை!

Updated : செப் 10, 2018 | Added : செப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement

கோவை:கோவையில் உள்ள பெரும்பாலான பள்ளிகள், தண்ணீரின்றி தவிக்கின்றன. அடிப்படை தேவைகளுக்கு கூட, காசு கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டியிருப்பதாக, தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.கோவை மாவட்டத்தில், ஆயிரத்து 981 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இதில், மிக பழமையான சில பள்ளிகளில் மட்டும், திறந்தவெளி கிணறு, போர்வெல் வசதியுடன் உள்ளது. பெரும்பாலான பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து, தண்ணீர் இணைப்பு பெற்று, அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்கின்றன. குடிநீர், கழிவறை, சத்துணவு பயன்பாட்டுக்கு என, தனித்தனியாக பல பள்ளிகளில், குழாய்கள் அமைக்கப்படவில்லை.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 20 மாணவர்களுக்கு ஒரு குடிநீர் குழாய் அமைக்கப்பட வேண்டும். இந்த விகிதத்தில், 95 சதவீத பள்ளிகளில் கட்டமைப்பு வசதி இல்லை. குடிக்க, கை கழுவ ஒரே தண்ணீர் தான் பயன்படுத்தப்படுகிறது.தண்ணீர் சேகரிப்பு தொட்டியை சுத்தம் செய்த நாள் குறித்து, பிரத்யேக பதிவேடு பராமரிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பதிவேடு, வெறும் அறிக்கை புத்தமாகவே உள்ளது. மாதக்கணக்கில் பல பள்ளிகளில், இத்தொட்டி சுத்தம் செய்யப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.மறந்து போன எலிக்குட்டி!கோவையில், கடந்தாண்டு தனியார் பள்ளி ஒன்றில், தண்ணீர் தொட்டிக்குள், எலிக்குட்டிகள் இருந்த சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்குப் பின், அனைத்து பள்ளிகளும், மாதம் இரு முறையாவது, தண்ணீர் தொட்டியை, சுத்தம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.ஆனால், இந்த உத்தரவை, அடுத்த சில தினங்களில், கல்வித்துறை அதிகாரிகளே மறந்து விட்டனர். பள்ளி ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள், தண்ணீர் தேக்க தொட்டியை பார்வையிட்டால், உண்மை நிலை புரியும்.பராமரிப்பு குறைபாடுகள் ஒருபுறமிருக்க, பல பள்ளிகள் அடிப்படை தேவைகளுக்கே, தண்ணீர் இன்றி, திண்டாடி வருகின்றன. சேர்க்கை அதிகமுள்ள பள்ளிகளில், இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாத, நிலை நீடிக்கிறது. கிட்டத்தட்ட, 60 சதவீத அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள், இப்பிரச்னையை தினசரி எதிர்கொள்கின்றனர்.கற்றல், கற்பித்தலை தாண்டி, குழந்தைகளின் உடல் நலனில், கல்வித்துறை அக்கறை காட்டுவதில்லை என்பது கல்வியாளர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.'ஏற்பாடு செய்யப்படும்'மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கேட்டபோது,'' தண்ணீர் வசதி இல்லாத பள்ளிகள், தகவல் அளித்தால், மாற்று ஏற்பாடு செய்து தரப்படும். பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து, ஆய்வுக்கு செல்லும் போது மேற்பார்வையிடுகிறோம். ''போர்வெல் அமைத்தல், கிணறு துார்வாருதல் என, அந்தந்த பள்ளியின் தேவைக்கு ஏற்ப, தண்ணீர் பெற வழிவகை செய்யப்படும்,'' என்றார்.
'கல்வித்துறையின் கடமை!'கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில்,'' ஒரு மாணவருக்கான அனைத்து தேவைகளும், நிறைவேற்றி தர வேண்டியது, கல்வித்துறையின் கடமை என்பதை, கட்டாய கல்வி உரிமை சட்டம் வலியுறுத்துகிறது. தண்ணீர் குடிக்காததால் ஏற்படும் பாதிப்புகளை, பள்ளிக்கூடம் கற்று தருகிறது. ஆனால், அங்கு குடிக்கவோ, பிற வசதிகளுக்கோ போதிய வசதி இல்லாமல் இருப்பது அவலமாகும். நலத்திட்ட பொருட்களை செலவிடும் நிதியை, அடிப்படை தேவைகள் பூர்த்தியடைய ஒதுக்கினால், மாணவர்கள் பலனடைவர்,'' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X