Prashant Kishor not to campaign for any party in 2019 | யாரையும் ஆதரிக்க போவதில்லை : பிரசாந்த் கிஷோர்| Dinamalar

யாரையும் ஆதரிக்க போவதில்லை : பிரசாந்த் கிஷோர்

Added : செப் 10, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பிரசாந்த் கிஷோர், பொது தேர்தல் 2019,  2012 குஜராத் தேர்தல், 2014 லோக்சபா தேர்தல், பாஜக,  தேர்தல் வியூகம், 2019 லோக்சபா தேர்தல், பார்லிமென்ட் தேர்தல் 2019, 
Prasanth Kishore, General Election 2019, 2012 Gujarat Election, 2014 Lok Sabha Election, BJP, Election Strategy, 2019 Lok Sabha Election, Parliament Election 2019,

ஐதராபாத்:வரும் 2019-ல் நடைபெற உள்ள பொது தேர்தலில் எந்த ஒரு கட்சியையும் ஆதரிக்க போவதில்லை என தேர்தல் வெற்றி வித்தகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012 குஜராத் தேர்தல், 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ., ஆதரவாக மோடி உடன் பணியாற்றியவர் பிரசாந்த் கிஷோர் . இவர் வகுத்து தந்த திட்டத்தின்படி செயல்பட்ட பா.ஜ., குஜராத்திலும் பொது தேர்தலிலும் ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து உ.பி., மாநிலத்திலும் பெரும்பாலான எம்.பி., இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றது.இதனையடுத்து பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சியினரிடையே புகழ் பெற்றார்.

ஒவ்வொரு மாநிலகட்சிகளும் தங்களின்மாநிலங்களுக்கு வந்து தங்களை வெற்றிபெற செய்யும் படி பிரசாந்த்திற்கு அழைப்பு விடுத்தன. இதனை ஏற்ற பிரசாந்த்கிஷோரும் ஒரு சில மாநிலங்களுக்கு சென்று அம்மாநில கட்சிகள் ஆட்சியை கைப்பற்றும் விதமாக தேர்தல் வியூகம் வகுத்து தந்துள்ளார்.
வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பொது தேர்தலுடன் ம.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் எந்த ஒரு கட்சியையும் ஆதரிக்க போவதில்லை என பிரசாந்த் கிஷோர் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ayappan - chennai,இந்தியா
10-செப்-201812:15:05 IST Report Abuse
Ayappan ராகுல் இதே வேலைக்கு import பண்ணியவுடன் தலைவர் பின் வாங்கிவிட்டார்
Rate this:
Share this comment
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
10-செப்-201811:32:38 IST Report Abuse
Ambika. K யாரும் சீந்தவில்லை என்பதே நிஜம். யாருமே இல்லாத கடையிலே எவ்வளவு தடவை டீ ஆத்துவாரு
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
10-செப்-201811:22:26 IST Report Abuse
kundalakesi வெற்றி வித்தகரா, வெற்றி வித்துபோனவரா? ஏதோ அப்போ மோடி பலத்தில் இவுரு பேரை தட்டிக்கினார். அப்புறம் போட்ட ஆட்டமெல்லாம் வெத்தாட்டம்தான் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X