பந்த்; தமிழகத்தில் ஆதரவு இல்லை; பஸ்கள் ஓடின முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பந்த்; தமிழகத்தில் ஆதரவு இல்லை; பஸ்கள் ஓடின முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு

Updated : செப் 10, 2018 | Added : செப் 10, 2018 | கருத்துகள் (88)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை : பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையிலான அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து இன்று (செப்.,10) நாடு முழுவதும் பந்த் அறிவித்துள்ளது. இந்த பந்த்தால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. வழக்கம் போல் ஆட்டோக்கள், பஸ்கள் ஓடின. சில முக்கிய வீதிகளில் பாதி அளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பஸ் நிலையங்களில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் சில பகுதிகளில் கடைகள் மட்டும் அடைக்கப்பட்டுள்ளன. பந்த் காரணமாக சென்னையில் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5000 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. லாரி, ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. புதுக்கோட்டையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.


மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை : பெட்ரோல் - டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் இந்த நாடு தழுவிய பந்த்திற்கு ஆதரவு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Madambakkam - Chennai,இந்தியா
16-செப்-201812:23:35 IST Report Abuse
Ramachandran  Madambakkam காங்கிரஸ் கட்சியினரும் அவர்களை ஆதரிக்கும் மற்ற கட்சியினரும் ஒரு மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்காமல் புறக்கணித்தால், பெட்ரோல் விலை குறைகிறதோ இல்லையோ அவர்களது செல்வாக்கு என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel
MIRROR - Kanchipuram,இந்தியா
10-செப்-201819:26:08 IST Report Abuse
MIRROR பந்த்துக்கு தமிழக மக்கள் ஆதரவு இல்லை என ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாது. மக்கள் போராட்டத்துக்கு மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்காத நிலையில் போராடுவதால் அர்த்தம் இல்லை என கருதியிருக்கலாம். ஆனால் தங்களது அதிருப்தியை உரிய நேரத்தில் மக்கள் தவறாமல் வெளிப்படுத்தலாம். காலம் தான் பதில் சொல்லும்.
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
10-செப்-201817:53:16 IST Report Abuse
வல்வில் ஓரி கான்கிராஸ் கூட்டாளி ... ரவுடியிச தீம்காவுக்கே இவ்ளோ தான் மரியாதையா..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X