காளிங்கராயன் பாசனத்தில் பயிர்கள் காயும் அபாயம்: மின் வாரிய செயல்பாட்டால் அவலம்| Dinamalar

தமிழ்நாடு

காளிங்கராயன் பாசனத்தில் பயிர்கள் காயும் அபாயம்: மின் வாரிய செயல்பாட்டால் அவலம்

Added : செப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கொடுமுடி: போதிய தண்ணீர் இருந்தும், மின்வாரியத்தின் அலட்சியத்தால், பயிர்கள் காயும் நிலை ஏற்பட்டுள்ளதாக, காளிங்கராயன் பாசன விவசாயிகள், குற்றம் சாட்டியுள்ளனர்.
கொடுமுடி, சாலைப்புதூர் துணை மின் நிலையத்தில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பு விவசாய நிலங்கள், மின் இணைப்பு பெற்றுள்ளன. கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக, முறை வைத்து மும்முனை மின்சாரம் வழங்குவதால், பயிர்கள் காயும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நான்கு நாட்களாக தொல்லை: இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: விவசாயத்துக்கு, ஒரு நாளைக்கு, 14 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க அரசாணை உள்ளது. ஆனால் நான்கு நாட்களாக, தொடர்ந்து மும்முனை மின்சாரம் வழங்காமல், 40 நிமிடங்கள் முதல் இரண்டு, மூன்று மணி நேரம் மட்டும் வழங்கப்படுகிறது. அதிலும், தொடர்ந்து வழங்காமல், பகுதி வாரியாக கொடுக்கப்படுகிறது.

நடவடிக்கை இல்லை: இருமுனை மின்சாரத்தில், 230 வோல்ட்டுக்கு பதிலாக, 180 வோல்ட் மட்டுமே கொடுப்பதால், தண்ணிர் பாய்ச்ச முடியாமல், விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனர். குறைந்த மின்சாரத்தால், விவசாய மோட்டார், வீடுகளில் மின் சாதன பொருட்கள் பழுதடைவது அதிகரித்துள்ளது. புகார் தெரிவிப்பதற்காக, மின்வாரியம் தந்துள்ள, வாட்ஸ் ஆப் எண்களில், தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதிகாரிகளின் அலட்சியம் நீடிக்கிறது.

குளறுபடி சரியாகுமா? இதனால் போதிய தண்ணீர் இருந்தும், மஞ்சள், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் காயும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலைப்புதூர் துணை மின் நிலையத்தை, கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும். மும்முனை மற்றும் இருமுனை மின்சாரம் வழங்குவதில் உள்ள குளறுபடியை, சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X