தொடர் சரிவில் ரூபாய் மதிப்பு : 72.67 ஐ எட்டியது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தொடர் சரிவில் ரூபாய் மதிப்பு : 72.67 ஐ எட்டியது

Updated : செப் 10, 2018 | Added : செப் 10, 2018 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, அமெரிக்க டாலர், சர்வதேச அன்னிய செலாவணி சந்தை, கச்சா எண்ணெய் விலை, இந்திய ரூபாய் மதிப்பு , இந்திய கரன்சி,  
Indian rupee depreciation, US dollar, international foreign exchange market, crude oil prices, Indian rupee value, Indian currency,

மும்பை : சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இன்றும் (செப்.,10) ரூபாய் மதிப்பு வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது.
செப்., 7 ம் தேதி வர்த்தக நேர இறுதியில் 71.73 ஆக இருந்த ரூபாய் மதிப்பு இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது 45 காசுகள் சரிந்து 72.15 ஆக இருந்தது. சிறிது நேரத்தில் மேலும் சரிந்து 72.18 என்ற புதிய உச்சபட்ச சரிவு நிலையை அடைந்துள்ளது. இதற்கு முன் செப்.,6 ம் தேதி 72.11 என்ற அளவிற்கு சரிந்ததே உச்சபட்ச சரிவாக கருதப்பட்டது. இந்நிலையில் பிற்பகல் வர்த்தகத்தின் மேலும் ரூபாய் மதிப்பு மிக கடுமையாக சரிந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி ரூபாய் மதிப்பு 94 காசுகள் சரிந்து 72.67 ஆக இருந்தது. சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் முன்பு எப்போதும் இல்லாத கடும் சரிவை எட்டி உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தின் காரணமாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் அமெரிக்க டாலரை அதிகம் வாங்கி வருகின்றனர். டாலரின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. மற்ற நாடுகளின் நாணயங்கள் டாலரை ஆதரித்து வரும் நிலையில், அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்தால் அது ரூபாய் மதிப்பிற்கு மேலும் அழுத்தத்தை கொடுக்க வாய்ப்பு இருப்பதாக சந்தை நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramaniam - Tirupur,இந்தியா
10-செப்-201819:18:00 IST Report Abuse
Balasubramaniam டாலர் 100 ரூபாய் வந்தால் கூட கூச்சம் இல்லாமல் அதை அரசின் சாதனை என்று சொல்லும் அளவிற்கு அகங்காரம் அறிவை மறைக்கிறது. வாஜ்பாய் 40 ரூபாய்க்கு கொண்டு வந்தார். அந்நிய முதலீடு இல்லை. பொருளாதார தடை இருந்தது. இப்போது ... பூனை புலி அல்ல என்று 4 ஆண்டு முடிந்தும் உணரவில்லை
Rate this:
Share this comment
Cancel
tamil - coonoor,இந்தியா
10-செப்-201814:30:56 IST Report Abuse
tamil இதுக்கும், மத்திய அரசுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை, ஆட்சி மட்டும் தான் எங்கள் தலைமையில் நடக்குது மற்ற அனைத்தும் யார் தலைமையில் நடக்கிறது என்று தெரியாது, தீவிரவாதிகளின் சதியாக இருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
10-செப்-201813:29:48 IST Report Abuse
தமிழ் மைந்தன் ஏற்றுமதியாளர்கள் வளரும் காலம். வாழ்த்துக்கள் மோடிஜி
Rate this:
Share this comment
Karthik - Chennai,இந்தியா
10-செப்-201819:21:03 IST Report Abuse
Karthikஇந்த புள்ளைக்கு இம்புட்டு அறிவா? என்னமா கருத்து கொட்டுது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X