முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு

Updated : செப் 10, 2018 | Added : செப் 10, 2018 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
முதுகு படிக்கெட், கேரளா வெள்ளம், மீனவர் மீட்பு பணி, கார் பரிசு, மகிந்திரா, ராணுவ வீரர்கள், கே.பி.ஜெய்ஸ்வால், எராம் மோட்டார்ஸ், 
Kerala Flood, Fisherman Rescue Service, Car Prize, Mahindra, Soldiers, KP Jaiswal, Eram Motors,KeralaFloods2018, KeralaRains ,Kerala,

மலப்புரம்: கேரளாவில் வெள்ள பாதிப்பின் போது, தனது முதுகை படிக்கெட்டாக்கி, பெண் ஒருவர் படகில் ஏற உதவி செய்த மீனவருக்கு கார் பரிசு கிடைத்துள்ளது.


கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், வென்கரா பகுதி வெள்ள நீரால் சூழப்பட்டு இருந்தது. வெள்ளத்தால் சூழப்பட்டு இருந்த வீடுகளில் தங்கி இருந்த மக்களை ராணுவ வீரர்கள் மீட்டனர். அவர்களுக்கு உதவியாக, 300 மீனவர்களும் களம் இறங்கினர். ஒரு இடத்தில் வெள்ளத்தில் சிக்கி கொண்ட பெண்ணை மீட்க மீனவர்களின் உதவி நாடப்பட்டது. அவர்களுக்கு ரப்பர் படகை தேசிய மீட்பு படையினர் அளித்தனர்.

மீட்பு படகில் சென்ற கே.பி.ஜெய்ஸ்வால் என்ற மீனவர், அந்த பெண் ரத்த போக்கினால் பாதிக்கப்பட்டு இருப்பதையும் , அவரால் தானாக படகில் ஏற முடியாது என்பதையும் உணர்ந்து, எதை பற்றியும் யோசிக்காமல் நீருக்குள் முட்டி போட்டு தனது முதுகையே படிக்கெட்டாக மாற்றினார். அவர் மீது ஏறி, அப் பெண் படகில் அமர்ந்து கொண்டார். இந்த படம் சமூக வலை தளங்களில் அதிகமாக பரவி, அந்த மீனவருக்கு பாராட்டுகள் குவிந்தன.


இச்சூழ்நிலையில், மகிந்திரா நிறுவனத்தின் கோழிக்கோடு டீலர் எராம் மோட்டார்ஸ் மீனவர் ஜெய்வாலுக்கு புத்தம் புதிய மகிந்திரா மாரசோ காரை பரிசாக அளித்து அசத்தியுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari r - tiruvottiyur,இந்தியா
16-செப்-201808:57:10 IST Report Abuse
Hari r நல்ல ஊக்குவிப்பு ,கொடுக்க மனசு இருக்கணுமே நன்றி
Rate this:
Share this comment
Cancel
Sakthi - Chennai,இந்தியா
12-செப்-201816:20:58 IST Report Abuse
Sakthi கார் கொடுத்த மகராசன் டீசல் ஒரு ஆயிரம் லிட்டர் கொடுத்திருந்த எவ்வளவு புண்ணியமா போயிருக்கும். இப்ப இருக்கிற விலைவாசியிலே அவரு காரை வாடகைக்குத்தான் விடணும் .
Rate this:
Share this comment
Cancel
Selvakumar Krishna - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-செப்-201812:57:49 IST Report Abuse
Selvakumar Krishna மிக அருமை காலத்தினால் செய்யும் உதவி ஞாலத்திலும் சால பெரிது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X