தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழைவாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழைவாய்ப்பு

Added : செப் 10, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தமிழகம், மழை வாய்ப்பு, சென்னை வானிலை மையம்

சென்னை : வளிமண்டலத்தில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், அடுத்த 3 நாட்களுக்கு வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் ஓரிரு முறை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி முதல் கர்நாடகா வரை குறைந்த காற்றழுத்த நிலை தொடர்கிறது. குறைந்த காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sangeedamo - Karaikal,இந்தியா
10-செப்-201817:44:35 IST Report Abuse
Sangeedamo வான்மேகம் என்னவோ அதன் வேலையை சரியாகத்தான் செய்கிறது மனிதர்களாகிய நாம்தான் அதனை சேமிக்கும் முறையும் தெரியாமல், வழியும் தெரியாமல் திடாடிக்கொண்டிருக்கிறோம் நம் அரசாங்கமோ இதற்கு ஒரு முழுமையான திட்டம் வகுக்காமல் நம்மை அல்லாடவிட்டுக்கொண்டிருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
10-செப்-201813:15:39 IST Report Abuse
Palanisamy T அடிக்கடி நல்ல மழைப் பெய்கின்ற சேதி, நல்லசேதிதான் ஆனால் பெய்கின்ற மழை நீரை வறட்சிக் காலத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்கும் திட்டங்களை அரசோ ஆட்சியாளர்களோ மக்களுக்குச் சொன்னால் இதை விட நல்ல சேதியாகயிருக்குமே சேமித்து வைக்கப் பட்ட நீரால் நிலத்தடி நீரும் உயர்வுக் காணுமே. பசுமையான தமிழகமும் நாளை மலருமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X