மோடி மவுனமாக இருப்பது ஏன் ? ராகுல் கேள்வி| Dinamalar

மோடி மவுனமாக இருப்பது ஏன் ? ராகுல் கேள்வி

Added : செப் 10, 2018 | கருத்துகள் (40)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 BharathBandh ,Rahul Gandhi, PM Modi, காங்கிரஸ், பிரதமர் மோடி, ராகுல், ராகுல் காந்தி, ரபேல் விமானம், டில்லி ராம் லீலா மைதானம், காங்கிரஸ் பந்த், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல், Congress, Rahul, பெட்ரோல்  டீசல் விலை உயர்வு, பாரத்பந்த், BharatBandh,  PetrolPriceHike ,PetrolDieselPriceHike ,PetrolPrice ,Petrol, DieselPriceHike, DieselPrice, Diesel, 
Prime Minister Modi, Raphael Flight, Delhi Ram Leela Stadium,
Congress Pant, former PM Manmohan Singh, Congress leader Rahul,

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரபேல் விமானம் வாங்கப்பட்டது, மற்றும் மக்களின் பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்க மறுப்பது ஏன் என டில்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த போராட்டத்தில் காங்., தலைவர் ராகுல் கேள்வி எழுப்பினார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ராகுல் தலைமையில் நடந்த போராட்டத்தில் அவர் பேசியதாவது:

கடந்த 70 ஆண்டுகளில் இது போன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது இல்லை. ஆனால் இந்த விலை உயர்வு குறித்து பிரதமர் மோடி மவுனமாக இருந்து வருகிறார். இது வரை இல்லாத அளவிற்கு பண மதிப்பு குறைந்துள்ளது. பிரதமர் மோடி இது வரை கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மத்திய அரசு ஏழகைளை மறந்து பணக்காரர்களுக்கே சலுகை செய்கிறது. ரபேல் விமானம் வாங்கப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி இந்த நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் அவர் வாய் திறக்க மறுக்கிறார். பண மதிப்பிழப்பு காரணமாக கறுப்பு பணத்தை பலரும் வெள்ளையாக மாற்றினர். விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். இன்றைய பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த எதிர்கட்சியினருக்கு நன்றி. வரும் காலத்தில் எதிர்கட்சிகள் ஒன்றுபட்டு மோடி அரசை வீழ்த்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.


மன்மோகன் ஆரூடம்


முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில்; மத்திய அரசு பல செய்திருக்கிறது. ஆனால் நாட்டு மக்களின் நலனுக்காக எதுவும் செய்யவில்லை. விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - London,யுனைடெட் கிங்டம்
10-செப்-201818:56:56 IST Report Abuse
anbu இப்போது மௌனசிங் கொஞ்சம் திருவாய் திறந்து பேசுகிறாரே, முன்னைய ஆட்சியில் பேசமுடியாமல் தவித்தாரே. அவர் கொஞ்சம் பேசட்டுமே என்று விட்டுக்கொடுத்தாரோ என்னவோ
Rate this:
Share this comment
Cancel
10-செப்-201818:43:23 IST Report Abuse
ஆப்பு இந்த பிஸ்கோத்து கூட உலகவங்கி பொருளாதார மேதை மன்மோகன் சிங் எல்லாம் தெரிஞ்சும் கூட நிக்கிறதுதான் தாங்க முடியலே...
Rate this:
Share this comment
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
10-செப்-201817:38:05 IST Report Abuse
SENTHIL NATHAN காங்கிரஸ் காலத்தில் பெட்ரோல் விலை ஏற்றிய போது ராகுல் கருத்து தெரிவித்தாரா ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X