பெட்ரோல்-டீசல் விலை உயர்விற்கு அரசு காரணமல்ல : ரவிசங்கர்| Dinamalar

பெட்ரோல்-டீசல் விலை உயர்விற்கு அரசு காரணமல்ல : ரவிசங்கர்

Added : செப் 10, 2018 | கருத்துகள் (54)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பாரத் பந்த், ராகுல் காந்தி,பெட்ரோல் டீசல், காங்கிரஸ், ரவிசங்கர் பிரசாத், எதிர்க்கட்சிகள் பந்த்,  காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரதமர் மோடி,  அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ராம்லீலா மைதானம், ராகுல் ,  Congress, Ravi Shankar Prasad, Opposition Bandh, Congress leader Rahul, Prime Minister Modi, Minister Ravishankar Prasad, Ramlila Maidan, Rahul,Rahul Gandhi, பெட்ரோல்  டீசல் விலை உயர்வு, BharathBandh ,BharatBandh,  PetrolPriceHike ,PetrolDieselPriceHike ,PetrolPrice ,Petrol, DieselPriceHike, DieselPrice, Diesel,

புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம் நடத்துகின்றன. டில்லியில் காங்., தலைவர் ராகுல் தலைமையில் நடந்த கண்டன போராட்டத்தில் 22 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன.

இருப்பினும் டில்லியில் ஆளும் கட்சியான ஆம்ஆத்மி இந்த பந்த்தை புறக்கணித்துள்ளது. சரத் பவார், ஸ்டாலின், இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் பந்த்தில் பங்கேற்கவில்லை. ராகுல் தலைமையில் பேரணியாக சென்ற எதிர்க்கட்சியினர் ராம்லீலா மைதானத்தில் கண்டன கூட்டம் நடத்தினர். அதில் பேசிய தலைவர்கள் பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பெட்ரோல்-டீசல் விலை உயர்வில் மத்திய அரசிற்கு எந்த பங்கும் இல்லை. விலை உயர்விற்கு மத்திய அரசு காரணமல்ல என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவில் பிரதமர் மவுனம் காப்பதாக குற்றம்சாட்டும் ராகுல், பீகாரின் ஜெகனாபாத் பகுதியில் மருத்துவமனைக்கு 2 வயது சிறுமியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்சை போராட்டக்காரர்கள் மறித்ததால் உயிரிழந்துள்ளதற்கு பதில் சொல்வாரா? அந்த குழந்தையின் மரணத்திற்கு ராகுலும், காங்.,கும் பொறுப்பேற்பாரா? நாட்டில் அச்சம் மிகுந்த சூழ்நிலையை காங்., உருவாக்கி வருகிறது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yila - Nellai,இந்தியா
11-செப்-201812:37:33 IST Report Abuse
yila இப்பவாவது சொன்னாரே... பிஜேபி ஆட்சி கோமாவில்தான் உள்ளது என்று....
Rate this:
Share this comment
Cancel
Arasu - Madurai,இந்தியா
11-செப்-201801:10:30 IST Report Abuse
Arasu ஏன்யா , நாங்க லூசுப்பயலுகன்னு நினைச்சியா , ஒட்டு கேட்டு எங்கள்ட்ட வருவல்ல , வருவ வாடி
Rate this:
Share this comment
Cancel
Arasu - Madurai,இந்தியா
11-செப்-201801:06:07 IST Report Abuse
Arasu பெட்ரோல்-டீசல் விலை உயர்விற்கு அரசு காரணமல்ல : ரவிசங்கர் B J P மந்திரி பெட்ரோல்-டீசல் விலை உயர்விற்கு காரணம் , எனக்கு தோணுது அநேகமா பாக் பிரதமர் இம்ரானாத்தான் இருக்கணும் , இல்லாட்டி நம்ம திருமுருகன் காந்தியோ , வளர்மதியோ , கோவனோ , வேல்முருகனோ , இல்ல நம்ம தமிழிசைட்ட உண்மைய சொன்ன பொண்ணா இருக்கலாம் , இருக்கணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X