chennai | காலங்களில் அவன் வசந்தம்...| Dinamalar

காலங்களில் அவன் வசந்தம்...

Updated : செப் 10, 2018 | Added : செப் 10, 2018
Advertisement

காலங்களில் அவன் வசந்தம் என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசனை இசைக்கவி ரமணன் கடந்த இரண்டு வருடங்களாக கொண்டாடிக் கொண்டு வருகிறார்.சென்னை மயிலாப்பூர் பாரதி வித்யாபவனம் அரங்கில் மாதம் ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வில் இசைக்கவி ரமணன் பிரதானமாக இருப்பார் இவருடன் கண்ணாதாசன் மீது பிரியம் கொண்ட யாராவது ஒரு விருந்தினர் பங்கேற்பர்.

சுவையான உரையாடலும்,பாடலுமாக செல்லும் இந்த நிகழ்வு கண்ணதாசனின் பல பரிணாமங்களை காட்டிக்கொண்டு இருக்கிறது.கண்ணதாசனைப்பற்றி இவ்வளவு விஷயம் சொல்லியாகிவிட்டது இனி அவ்வளவுதான் என்று நினைத்துவிட முடியாது அடுத்த நிகழ்வில் இன்னும் பல நிகழ்வுகளுடன் இசைக்கவி ரமணன் ரசிகர்களை சந்திப்பார்.

கடந்த வாரம் கண்ணதாசனின் தீவிர ரசிகரும் அவருக்கு கடந்த 28 ஆண்டுகளாக விழா எடுத்து வருபவருமான துபாயைச் சேர்ந்த கவிஞர் காவிரி மைந்தன் இசைக்கவி ரமணனுடன் இணைந்து கண்ணதாசனைக் கொண்டாடினார்,அவருக்கு விழா நிறைவில் தேர்ந்து எடுக்கப்பட்ட ரசிகர் என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

இந்த முறை கண்ணதாசனின் காதல் ரசம் பொங்கும் பல பாடல்கள் எடுத்தாளப்பட்டது பேசப்பட்டது பாடப்பட்டது.அதிலும் ‛தேன் சிந்துதே வானம்' என்ற பாடலின் போது நிகழ்ந்த விஷயங்களை சொன்னபோது மிகவும் சுவராசியமாக இருந்தது.

நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடதே...

சொல்லடி அபிராமி - வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?

என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய், இது யார் பாடும் பாடலென்னு நீ கேட்கிறாய்?

விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் காற்று

உனக்காகவே நான் வாழ்கிறேன்..

என்பது போன் பல பாடல்கள் பாடப்பட்டது இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.

மனதில் எந்தவித சுமையையும் ஏற்றிக்கொள்ளாமல் ரசித்து மகிழத்தக்க நிகழ்வு இது என்றே சொல்லலாம் நேரம் இருக்கும் போது வாசகர்கள் இசைக்கவி ரமணனுடன் தொடர்பு கொண்டு நிகழ்வைத் தெரிந்து கொண்டு செல்லலாம் அவரது எண்:9940533603.

எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in





Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X