அறிவியல் ஆயிரம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


விழிப்புணர்வு தலைநகர்


உலகின் 'ஆணுறைகளின் தலைநகர்' என தாய்லாந்தின் பாட்டயா நகரை கூறுவர். ஓரினச் சேர்க்கை மீதான தடையை நீக்க வழக்கு தொடுத்த நாஜ் அறக்கட்டளை, ஆணுறை பயன்படுத்துவதால் எச்.ஐ.வி., / எயிட்ஸ் பாதிப்பை தடுக்கமுடியும் என்ற விழிப்புணர்வை முதன்முதலில் ஏற்படுத்தியது. எச்.ஐ.வி கண்டுபிடிப்பதற்கு முன்னர், 'குழந்தைப் பேற்றை தடுக்க' என்ற கருத்தில் இந்தியாவில் ஆணுறை அறிமுகமானது. நிரோதனம் என்றால், சமஸ்கிருதத்தில் தடை என அர்த்தம். எனவே முதன்முதலில் ஆண் உறையின் பிராண்ட் பெயர் 'நிரோத்' என வைத்தனர்.


தகவல் சுரங்கம்



விரைவில் முடிந்த வழக்கு


இந்திய வரலாற்றிலேயே மகாத்மா காந்தி கொலை வழக்கு, விரைவில் முடிந்த கொலை வழக்கு. 22 மாதங்களில் கோட்சே துாக்கிலிடப்பட்டார். 1948 மே இறுதியில் தொடங்கி ஏழு மாதங்கள் மட்டுமே நடந்தது. நீதிபதி ஆத்ம சரண் விசாரித்தார். விசாரணை வெளிப்படையாக நடந்தது. உரிய அனுமதி பெற்று வழக்கு விசாரணையை நேரில் பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேல் முறையீடு வழக்கு விசாரணை பஞ்சாப் உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. ஒன்றரை மாத விசாரணைக்குப் பின் உயர்நீதிமன்றம், கோட்சே, ஆப்தேக்கு துாக்குத் தண்டனையை உறுதி செய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X