மக்கள் உயிருடன் விளையாடாதீங்க: ரவிசங்கர் பிரசாத் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
மக்கள் உயிருடன் விளையாடாதீங்க!

புதுடில்லி : மக்கள் உயிருடன் விளையாடும் விபரீத விளையாட்டை, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

மக்கள் உயிருடன் விளையாடாதீங்க: ரவிசங்கர் பிரசாத்


பெட்ரோல், டீசல் விலை, வரலாறு காணாத வகையில் தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்டித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய, நாடு தழுவிய, வேலை நிறுத்தப் போராட்டத்தால், சில மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெரும்பாலான மாநிலங்களில், இந்த போராட்டத்திற்கு ஆதரவு காணப்படவில்லை.

எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய பாரத் பந்த் குறித்து, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நிருபர்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறோம். விலை ஏற்றம் குறித்த அரசின் கருத்தை புரிந்துள்ள மக்கள், அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் பாரத் பந்த் அழைப்பை, மக்கள் நிராகரித்துள்ளனர்.

இதனால், காங்.,கும், பிற எதிர்க்கட்சி களும் உற்சாகம் இழந்துள்ளன. மத்திய அரசுக்கு எதிராக வன்முறையை துாண்டி வரும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை, மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் சதி திட்டமிடுகின்றனர்.

பீஹாரில், எதிர்க்கட்சியினர் நடத்திய பாரத் பந்த்தால், 3 வயது சிறுமியை, குறித்த

Advertisement

நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. சிறுமி அழைத்து செல்லப்பட்ட ஆம்புலன்சை, எதிர்க்கட்சியினர் மறித்துள்ளனர். இதனால், அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இதற்கு, ராகுல் பொறுப்பேற்பாரா?

மக்கள் உயிருடன் விளையாடும் இதுபோன்ற விபரீத விளையாட்டை, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12-செப்-201802:20:53 IST Report Abuse

Mani . V"நாங்கள் (பாஜக) ஏற்கனவே மக்களை கொலையாய், கொல்வதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மக்கள் உயிருடன் விளையாடும் விபரீத விளையாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும்".

Rate this:
Solvathellam Unmai - Chennai,இந்தியா
11-செப்-201819:47:50 IST Report Abuse

Solvathellam Unmaiபிச்சை வேண்டுமானால் கேள், வந்தேறிகளை வந்தவழியே தெறிக்க விட வேண்டும்

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
11-செப்-201819:34:44 IST Report Abuse

g.s,rajanYou ruling party people are playing with the life of the common man. g.s.rajan, Chennai.l

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X