அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு...கேள்விக்குறி! சமூக விரோதிகளின் ஆதிக்கத்தால் நோயாளிகள் அச்சம்| Dinamalar

தமிழ்நாடு

அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு...கேள்விக்குறி! சமூக விரோதிகளின் ஆதிக்கத்தால் நோயாளிகள் அச்சம்

Added : செப் 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால், நோயாளிகள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மகப்பேறு, குழந்தைகள் நலத்துறை, பொது மருத்துவம் உள்ளிட்ட 36 வார்டுகள் இயங்கி வருகின்றன.
இம்மருத்துவமனைக்கு விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார் மாவட்டங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நுாற்றுக் கணக்கானோர் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்னர். இவர்களுக்கு உதவியாளர்களாக ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உடன் தங்கியுள்ளனர்.
மாவட்டத்தின் பெரிய மருத்துவமனையாக திகழும் இம்மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், இரண்டு போலீசார் என மூன்று பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதில் ஒருவர் மருத்துவமனையில் விபத்து, விஷம் குடித்து அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் என அனைவரின்
தகவல்களை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் , எஸ்.பி., அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மற்ற இருவர்கள் மருத்துவமனையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவமனை கல்லுாரி டீன் அறையின் கண்காணிப்பில் 16 சிசிடிவி கேமராக்களும், ஆர்.எம்.ஓ., அறையின் கண்காணிப்பில் 12 சி.சி.டி.வி., கேமராக்களும், கல்லுாரி விடுதி, குடியிருப்பு பகுதியில் 5 சிசிடிவி கேமராக்கள் இயங்கி வருகின்றது. இவற்றில் சில கேமராக்கள் பழுதாகியுள்ளது. போதிய போலீஸ் பாதுகாப்பு மற்றும் போதிய கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத காரணத்தினால், இரவு நேரங்களில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.
இதனால் மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளராக இருப்பவர்களின் பைக்குகள், நகைகள், மணிபர்ஸ், மொபைல் போன் உள்ளிட்ட பொருட்கள் அடிக்கடி திருடு போவது அதிகரித்துள்ளது. அனைத்திற்கும் மேலாக, நோயாளிகள் உடன் தங்கியுள்ள பெண்கள் பல நேரங்களில் சமூக விரோதிகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்னர். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள், வெளியில் தெரிந்தால் அசிங்கம் எனக் கருதி போலீசில் புகார் செய்வதில்லை. இதுவே சமூக விரோதிகளுக்கு கொண்டாட்டமாகி உள்ளது.
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும், முக்கிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நோயாளிகளுடன் தங்கும் உதவியாளர்களுக்கு மருத்துவமனை சார்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும். இரவு நேரங்களில் அடையாள அட்டை இல்லாத நபர்களை வெளியேற்ற வேண்டும். நேயாளிகளின் உதவியாளர்கள் தங்க தனியாக அமைக்கப்பட்டுள்ள அறைகளில் தங்கியிருப்பவர்களை கண்காணிக்க வேண்டும். பைக்குள் திருடு போவதை தடுக்க, தனியார் பராமரிப்பில் பைக் பாதுகாப்பு நிலையம் அமைக்க மருத்துவமனை நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X