வங்கி அதிகாரி சடலம் போலீசார் மீட்பு| Dinamalar

வங்கி அதிகாரி சடலம் போலீசார் மீட்பு

Added : செப் 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் மாயமான, வங்கி அதிகாரியின் உடலை, போலீசார் மீட்டுள்ளனர். அவரை கொலை செய்தவனையும், போலீசார் கைது செய்துள்ளனர்.மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு, மும்பையின் மலபார் ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர், எச்.டி.எப்.சி., வங்கியின் துணை தலைவராக பணியாற்றிய, சித்தார்த் சங்வி, 38. சமீபத்தில், வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு சென்ற சங்வி, திடீரென மாயமானார்.கணவர் வீடு திரும்பாததாலும், மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்ததாலும் சந்தேகமடைந்த அவரது மனைவி, போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து, ஐந்து நாட்களுக்கு பின், நவி மும்பையின் கோபர் கைரானே பகுதியில், சங்வியின் கார் கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்து, ரத்தக் கறை படிந்த கத்தியும் மீட்கப்பட்டது.இந்த காரை நிறுத்தி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, சர்பராஸ் ஷேக் என்பவனை கைது செய்தனர்.அவனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கல்யாண் நெடுஞ்சாலை பகுதியில், சங்வியின் உடல் மீட்கப்பட்டது.மிகவும் குறுகிய காலத்தில், தன் திறமையால், வங்கி துணை தலைவர் பதவிக்கு, சங்வி உயர்ந்ததால் பொறாமைப்பட்ட, வங்கி ஊழியர்கள் சிலரின் துாண்டுதலால் இந்த கொலையை செய்ததாக, வாடகை டாக்சி டிரைவரான, சர்பராஸ் ஒப்புக் கொண்டான்.இதையடுத்து, சங்வியின் சக ஊழியர்களில், ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.அவர்களிடமும், வங்கி அதிகாரிகளிடமும், போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X