வீடு தேடி வரும் அரசு சேவை: துவக்கினார் அரவிந்த் கெஜ்ரிவால் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
வீடு தேடி வரும் அரசு சேவை
துவக்கினார் அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடில்லி : ஓட்டுனர் உரிமம் முதல், திருமண சான்றிதழ் வரை, 40 வகையான சான்றிதழ்களை வீடு தேடி வந்து வழங்கும் திட்டத்தை, டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று துவக்கி வைத்தார்.

வீடு தேடி வரும்,அரசு சேவை,துவக்கினார்,அரவிந்த் கெஜ்ரிவால்


டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. சான்றிதழ்கள் பெறுவதற்காக, அரசு அலுவலகங்களில், மக்கள் காத்திருப்பதை தவிர்க்கவும்; அரசு அலுவலர்கள் லஞ்சம் பெறுவதை தடுக்கவும், டில்லி அரசு முடிவு செய்தது.

முட்டுக்கட்டை :


பிறப்பு, இறப்பு, ஜாதி, வருமானம் மற்றும் திருமண சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் மற்றும் குடிநீர் இணைப்பு உட்பட, 40 வகையான சேவைகளை, வீட்டுக்கே சென்று வழங்க, மாநில அரசு திட்டமிட்டது. இந்த திட்டத்துக்கு, டில்லி கவர்னர், பைஜால், முட்டுக்கட்டை போட்டதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தனியார் ஏஜன்சிகள் நியமிக்கப்பட்டன. சான்றிதழ் தேவைப்படுவோர், அரசு அறிவித்து உள்ள ஏஜன்சிக்கு போன் செய்ய வேண்டும். அங்கு கேட்கும் விபரங்களை, போனிலேயே கூற வேண்டும். பின், ஏஜன்சியைச் சேர்ந்த அலுவலர், வீட்டுக்கே வந்து, தேவைப்படும் ஆவணங்களின் நகலை பெற்றுச் செல்வார்.

Advertisement

கூடுதலாக ரூ.50 வசூல் :


ஆவணத்தை ஆய்வு செய்து, அதிகாரிகள் அளிக்கும் சான்றிதழை, ஏஜன்சி ஊழியர், வீட்டுக்கே வந்து வழங்குவார். இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இதற்காக, வழக்கமான கட்டணத்தை விட, கூடுதலாக, 50 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படும். வீட்டுக்கே வந்து சான்றிதழ் வழங்கும் திட்ட துவக்க விழா, டில்லியில் நேற்று நடந்தது. தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திட்டத்தை துவக்கி வைத்தார்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhuvanesh - Vellore,இந்தியா
12-செப்-201800:22:40 IST Report Abuse

Bhuvaneshநல்ல திட்டம், இந்த திட்டத்தின் நிறை குறைகளை அறிந்து மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும். பொது மக்களுக்கு வீண் அலைச்சல் மற்றும் சிரமம் குறையும் என நம்புகிறேன்....

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
11-செப்-201817:25:46 IST Report Abuse

ganapati sbநல்ல முன் முயற்சிக்கு பாராட்டுக்கள் . அனால் இப்போது 100 கோடியில் நடக்கும் அரசாங்க விஷயங்களை 1000 கோடியில் நிகழ்த்த வேண்டியிருக்கும் என்கிறார்கள் . அரசிடம் போதுமான பணம் இருந்தால் மக்களின் வசதிக்காக செய்யப்படும் கூடுதல் செலவு தவறில்லை அப்படியே விஜயகாந்த் சொன்னது போல வீட்டுக்கே ரேஷன் பொருட்களை கொண்டு போயி கொடுத்துடுங்க

Rate this:
ديفيد رافائيل - مدری,இந்தியா
11-செப்-201816:50:30 IST Report Abuse

ديفيد رافائيلசூப்பர், தமிழ் நாட்டில் இருக்கா?

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X