மனைவி தலையுடன் கணவன் ஊர்வலம்| Dinamalar

மனைவி தலையுடன் கணவன் ஊர்வலம்

Added : செப் 11, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மனைவி தலையுடன் கணவன் ஊர்வலம்

பெங்களூரு: கர்நாடகாவில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரது தலையை வெட்டி, போலீஸ் ஸ்டேஷன் வரை, ஊர்வலமாக எடுத்துச் சென்ற கணவனின் செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சிக்கமகளூரை சேர்ந்தவர் சதீஷ்; இவர், மனைவியுடன் வசித்து வந்தார்.தன் மனைவிக்கு, வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக, சதீஷுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக, கணவன் - மனைவி இடையே, அடிக்கடி சண்டை நடந்தது.இந்நிலையில், சந்தேகம் தீவிரமடைந்த நிலையில், வீட்டுக்கு வந்த சதீஷ், மனைவியின் கழுத்தை, கத்தியால் கொடூரமாக அறுத்துள்ளார். இதில், அவரது மனைவி உயிரிழந்தார்.பின், துண்டிக்கப்பட்ட மனைவியின் தலையை, கையில் சுமந்தபடி, ஊர் முழுக்க வலம் வந்தார். இறுதியில், போலீஸ் ஸ்டேஷன் சென்று, சரணடைந்தார்.கையில் பெண்ணின் துண்டித்த தலையுடன் வந்த சதீஷை பார்த்து, போலீசார் மிரண்டனர். சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மனைவியின் துண்டித்த தலையுடன் சதீஷ் வலம் வருவதை, பலர், மொபைல் போனில், 'வீடியோ' எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.அதில், சதீஷ், கொஞ்சமும் குற்ற உணர்வின்றி, சிரித்தபடி நடந்து வரும் காட்சி, பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-செப்-201801:16:24 IST Report Abuse
Ramesh Rayen என்ன இருந்தாலும் ஒரு உயிரை எடுக்க யாருக்கும் உரிமை கிடையாது - வேண்டாம் என்றால் பிரிந்து போக வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
13-செப்-201811:59:51 IST Report Abuse
arabuthamilan அந்த பெண்ணுக்கு சரியான தண்டனை.
Rate this:
Share this comment
Cancel
Bala - madurai,இந்தியா
12-செப்-201800:01:12 IST Report Abuse
Bala "கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. " ஆக இந்த கொலைக்கு குமாரசாமி தான் காரணம் அப்படி தானே???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X