ரவுடி, 'புல்லட்' நாகராஜ் சிக்கினான் : பெரியகுளத்தில், 'தூக்கியது' போலீஸ்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரவுடி, 'புல்லட்' நாகராஜ் சிக்கினான் : பெரியகுளத்தில், 'தூக்கியது' போலீஸ்

Added : செப் 11, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ரவுடி, 'புல்லட்' நாகராஜ் சிக்கினான் : பெரியகுளத்தில், 'தூக்கியது' போலீஸ்

பெரியகுளம்: தேனி கலெக்டர், மதுரை, பெரியகுளம் போலீஸ் அதிகாரிகளுக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் கொலை மிரட்டல் விடுத்த ரவுடி, 'புல்லட்' நாகராஜனை, 52, பெரியகுளத்தில் நேற்று போலீசார் பிடித்தனர். அவனிடமிருந்து, 1 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தைச் சேர்ந்தவன், ரவுடி, 'புல்லட்' நாகராஜன். 'புல்லட்'டில் சென்று பெண்களிடம் நகை பறித்தது உட்பட, 30 வழக்குகள் உள்ளன.
கொலை மிரட்டல் : கொலை வழக்கில், மதுரை சிறையில் இருந்த இவனது, அண்ணன் ரமேஷ் முருகன், ஒழுங்கீனமாக நடந்ததால் கவனிக்கப்பட்டான். இதற்காக மதுரை சிறை, எஸ்.பி., ஊர்மிளாவுக்கு வாட்ஸ் ஆப்பில் கொலை மிரட்டல் விடுத்த நாகராஜன் மீது, கரிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.அவனைப் பிடிக்க முயன்ற, தென்கரை பெண் இன்ஸ்பெக்டர் மதனகலாவிற்கும், அதே பாணியில் கொலை மிரட்டல் விடுத்தான். தேனி கலெக்டர், பல்லவி பல்தேவை அவதுாறாகப் பேசி, மூன்றாவதாக ஆடியோ வெளியிட்டான்.
மதுரை, கரிமேடு போலீசார், தென்கரை போலீசார் தனிப்படை அமைத்து அவனைத் தேடி வந்தனர்.செப்., 8ல் சிவகங்கையிலும், நேற்று முன்தினம் பரமக்குடியிலும், 'பல்சர்' பைக்கில் நாகராஜன் சுற்றியுள்ளான்.நேற்று அதிகாலை, வத்தலக்குண்டில் தங்கிய அவன், நேற்று காலை, 9:45 மணிக்கு பெரியகுளத்தில் பைக்கில் வந்துஉள்ளான்.
ரூ.1 கோடி கள்ள நோட்டு : இதைப்பார்த்த, தென்கரை, எஸ்.பி.சி.ஐ.டி., காசிராஜன்; எஸ்.பி.எஸ்.ஐ., ராஜேந்திரன் ஆகிய இருவரும் பைக்கிலும், ஏ.டி.எஸ்.பி., சுருளிராஜா ஜீப்பிலும் விரட்டினர். தண்டுப்பாலம் பகுதியில், நாகராஜனை காசிராஜன் பிடித்தார்.அப்போது, 'பெல்'டில் இருந்த கத்தியை நாகராஜன் எடுக்க முயற்சித்து உள்ளான். அதற்குள் மற்றவர்களும் வந்துவிட நாகராஜன் சிக்கினான்.நாகராஜன் வைத்திருந்த பையில், 2,000 - 500 - 100 ரூபாய் என ஆறு கட்டுகள், 1 கோடி ரூபாய் மதிப்புக்கு கள்ளநோட்டுகள் இருந்தன.ஒரு அடி நீளமுள்ள இரண்டு கத்தி, இரண்டு பொம்மை துப்பாக்கி, நீதிபதி மற்றும் வழக்கறிஞர் கோட், ஆறு அலைபேசி, வழக்கறிஞர், பிரஸ் உட்பட எட்டு அடையாள அட்டை, இரண்டு மணிபர்ஸ், கவரிங் செயின், கவரிங் மோதிரம், கையுறை, சப் - ஜட்ஜ் என போர்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். நாகராஜனிடம் தொடர் விசாரணை நடக்கிறது.துணை நடிகை உட்பட நாகராஜனுக்கு, ஆறு மனைவிகள் உள்ளனர் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-செப்-201811:46:06 IST Report Abuse
Malick Raja இந்நேரம் இவனுக்கு அம்மாகிட்டே குடித்த பால் கூட வெளிவரும் அளவுக்கு உரிய மடியாதையை தமிழக காவல்துறை வழங்கி இருக்கும் ... இவனையெல்லாம் போட்டுத்தள்ளினால் விபரம் கிடைக்காமல் போய்விடும் எனவே உரிய சிகிக்ச்சை மூலம் உயரிய நடவடிக்கையில் பல உண்மைகளும் பெரியளவில் வெளிவரும் ..
Rate this:
Share this comment
Cancel
ravichandran - Hosur,இந்தியா
11-செப்-201814:43:38 IST Report Abuse
ravichandran 6 மனைவிகளா?அடிபாவிங்கள ஞியாயமா நல்லவனா இருக்கிறவன் பொண்ணு கேட்டா ஆயிரம் நொட்டை சொல்லிட்டு கட்டிக்க மாட்டேங்கறீங்க ஆனா இவனை மாதிரி ஆளுங்கெல்லாம் குறைஞ்சது ரெண்டு மூணுன்னு கட்டிக்கிறானுங்களே அப்படி...பொண்ணுங்க நீங்க படிக்கிறது எல்லாமே வீண்தானா?????
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
11-செப்-201814:27:08 IST Report Abuse
Bhaskaran என்கவுன்ட்டர் போட்டுறவேண்டியதுதானே இன்னும் இவனை பாதுகாக்க செலவு செய்யணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X