குட்கா வழக்கில் அடுத்து சிக்கும் அதிகாரிகள் யார் யார்? Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
குட்கா,வழக்கு,அடுத்து சிக்கும்,அதிகாரிகள்,

'குட்கா' ஊழல் வழக்கில் கைதான, மாதவ ராவ் உள்ளிட்ட ஐந்து பேரை, நான்கு நாட்கள், காவலில் எடுத்துள்ள, சி.பி.ஐ., அதிகாரிகள், ரகசிய இடத்தில், அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, இவ்வழக்கில், அடுத்து சிக்கப்போகும் அதிகாரிகள் யார் யார் என்ற, எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தமிழக முதல்வராக, ஜெயலலிதா இருந்தபோது, 2013ல், குட்கா, மாவா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு தடை விதித்தார். ஆனால், சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த, மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ் ஆகியோர், செங்குன்றம் அருகே, சட்டவிரோதமாக, குட்கா ஆலை நடத்தி வந்தனர். மாநிலம் முழுவதும் குட்கா, 'சப்ளை' செய்து, கோடிகளை குவித்து
வந்தனர்.

லஞ்சம் :


இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய, ஐ.பி.எஸ்., அதிகாரிகள், டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர், ஜார்ஜ் உள்ளிட்ட போலீசார், குட்கா விற்பனைக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். அதற்கு கைமாறாக, அவர்களுக்கு, பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறி உள்ளது.

அதேபோல, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி, எம்.கே.பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகளும், பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளனர். இந்த குற்றச்சாட்டில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கரும் சிக்கினார். அவருக்கும், குட்கா அதிபர்கள் லஞ்சம் கொடுத்துள்ளதாக, குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, இவர்களின் வீடுகளில், 2016ல், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, மாதவ ராவிடம் கணக்காளராக வேலை பார்த்த, யோகேஷ்வரி என்பவரது வீட்டில், ரகசிய, 'டைரி' சிக்கியது.

அதில், குட்கா விவகாரத்தில் சிக்கியுள்ள, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் அமைச்சர் உள்ளிட்ட அத்தனை பேருக்கும், 40 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான தகவல்கள் இருந்துள்ளன.

மேலும், வருமான வரித்துறை அதிகாரிகளிடம், மாதவ ராவ் அளித்துள்ள வாக்குமூலத்திலும், மேற்கண்ட தகவலை உறுதிப்படுத்தி உள்ளார். இதையடுத்து, குட்கா விவகாரம், லஞ்ச ஒழிப்பு போலீசார் வசம் சென்றது. ஆனால், விசாரணையில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதிரடி சோதனை :


அதனால், தி.மு.க., தொடர்ந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், குட்கா விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றியது. சி.பி.ஐ., அதிகாரிகள், சமீபத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர், ஜார்ஜ் போன்றோரின் வீடுகள் உள்ளிட்ட, 40 இடங்களில், அதிரடி சோதனை நடத்தினர்.

மும்பை, பெங்களூரு, புதுச்சேரியிலும் சோதனை நடந்தது. அதன்பின், குட்கா ஆலை உரிமையாளர்கள், மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், கலால்

வரித்துறை அதிகாரி, எம்.கே.பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர்.

சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இவர்கள் ஐந்து பேரையும், நான்கு நாட்கள் காவலில் எடுத்துள்ள, சி.பி.ஐ., அதிகாரிகள், ரகசிய இடத்தில் வைத்து உள்ளனர். அவர்களிடம், இந்த விவகாரத்தில், லஞ்சம் பெற்றவர்கள் குறித்து, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், குட்கா விவகாரத்தில், அடுத்தடுத்து அதிகாரிகள் சிக்குவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட பட்டியல் :


இதற்கிடையில், குட்கா ஊழல் நடந்த காலகட்டத்தில், சென்னை கமிஷனர்களாக இருந்தவர்கள் பற்றியும், கூடுதல், இணை, துணை, உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்களாக இருந்தோர் பற்றியும், நீண்ட பட்டியலை, ஜார்ஜ் வெளியிட்டுள்ளார். ஜார்ஜ் வெளியிட்ட பட்டியலில் உள்ள, ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, இந்த விவகாரத்தில் தொடர்புள்ளதா என, மாதவ ராவ் உள்ளிட்ட, ஐந்து பேரிடமும், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதனடிப்படையில், மாதவ ராவின் மேலாளர்கள் தனபால், நடராஜன், கணக்காளர்கள் பாலு, சுப்பையா மற்றும் உறவினர்கள் என,

ஆறு பேரை, நேற்று, சி.பி.ஐ., அதிகாரிகள் வரவழைத்து, பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இவர்கள் சொன்ன தகவல் அடிப்படையில், நான்கு நாள் காவலுக்கு பின், அடுத்தகட்ட கைது நடவடிக்கை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு நாள் காவல்: சி.பி.ஐ.,க்கு அனுமதி!

குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட, ஐந்து பேரையும், நான்கு நாட்கள், சி.பி.ஐ., காவலில் எடுத்து விசாரிக்க, சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. குட்கா ஆலை உரிமையாளர் மாதவ ராவ், பங்குதாரர்கள் சீனிவாச ராவ், உமாசங்கர், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் அதிகாரி பாண்டியன் ஆகியோரை, காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.ஐ., முடிவு செய்தது. அதற்கு அனுமதி கோரி, சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஐந்து பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மனுவை, நீதிபதி திருநீலபிரசாத் விசாரித்தார். சி.பி.ஐ., வழக்கறிஞர் வாதாடியதாவது: தமிழக அரசு தடை விதித்தும், அதை மீறி, குட்கா விற்பனையில் மாதவ ராவ், உமாசங்கர், சீனிவாச ராவ் ஈடுபட்டனர். உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன் லஞ்சம் பெற்றுள்ளார். கலால் அதிகாரி பாண்டியனுக்கு எதிராகவும், குற்றச்சாட்டு உள்ளது. சி.பி.ஐ., நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். அப்போது, மற்றவர்களின் தொடர்பும் தெரிய வரும். இவ்வாறு அவர் வாதாடினார். காவலில் எடுத்து விசாரிக்க, ஐந்து பேர் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட, நீதிபதி திருநீலபிரசாத், நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு அனுமதி வழங்கினார். வரும், 14ம் தேதி காலை, 11:00 மணி வரை, சி.பி.ஐ., காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12-செப்-201802:18:25 IST Report Abuse

Mani . Vஒரு மகா ஊழல் பேர்வழி ஒட்டு மொத்த மந்திரிசபையையும் மிரட்டுகிறார் ("அனைவரின் ஊழலையும் வெளிப்படுத்துவேன்") என்றால் இந்த வழக்கின் லட்சணம் என்ன என்று புரிந்து கொள்ள முடிகிறது.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-செப்-201820:23:29 IST Report Abuse

Pugazh Vசிகரெட் பிடிக்க முடியாத தாத்தாக்கள், ட்ரிங்க்ஸ் சாப்பிட முடியாத நோயாளிகள் பாவம். உலகமே தமிழ்நாடு தான் என்று நினைக்கிற கிணற்றுத்தவளை கருத்துகள். சிகரெட்டை தடை பண்ணினால் வைகோ வுக்கு ப்ரச்னையாம். உலகம் முழுதும் மார்க்கெட்டிங் பண்ணுகிற சிகரெட் கம்பெனிகள் தமிழ் நாட்டை நம்பியா இருக்கு?

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
11-செப்-201814:55:42 IST Report Abuse

இந்தியன் kumarஅரசியல்வாதிகளுக்கு காசு கொடுத்து வேலைக்கு (உள்ளே) வரும் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி சம்பாதிக்க தான் பார்ப்பான் , நேர்முக தேர்வு இல்லாமல் ஒன்லி மெரிட் முறையில் அதிகாரிகளை தேர்வு செய்ய வேண்டும்.

Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X