'ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்' ரூ.1 லட்சம் கட்டணம் Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரூ.1 லட்சம்!
'ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்' கட்டணம்..

தமிழக சுகாதாரத்துறை செயல்படுத்த உள்ள, 'ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்' சேவைக்கு, ஒரு மணி நேரத்திற்கு, 1 லட்சம் ரூபாய், கட்டணம் வசூலிக்க, அரசு முடிவு செய்துள்ளது.

ஹெலிகாப்டர்,ஆம்புலன்ஸ்,ரூ.1 லட்சம்,கட்டணம்


மாவட்டங்களில் இருந்து, உயர் சிகிச்சைக்காக, சென்னை போன்ற நகரங்களுக்கு அழைத்து வர, ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்த, சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக, நோயாளியை

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியும். இந்த சேவைக்கான, திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து, சுகாதாரத்துறை திட்ட அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அருகே, 'ஹெலிகாப்டர்' இறங்கு தளங்கள் அமைக்கும்படி, கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சேவையை செயல்படுத்த, தமிழக அரசு அனுமதி அளித்த பின், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை அளிக்கும், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படும். இதையடுத்து, மத்திய அரசிடம் அனுமதி பெற்று, சென்னை, மதுரை, திருச்சி போன்ற விமான நிலையங்களில்,

Advertisement

ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படும்.

நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப, ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படும். இந்த சேவைக்கு, ஒரு மணி நேரத்திற்கு, 1 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. துாரம், நேரத்திற்கு ஏற்ப, கட்டணம் மாறுபடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ديفيد رافائيل - مدری,இந்தியா
11-செப்-201816:49:16 IST Report Abuse

ديفيد رافائيلகண்டிப்பா பணத்துல குளிப்பவர்கள் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும் (அரசியல்வாதிகளுக்கு இலவசம் தானே)

Rate this:
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
11-செப்-201816:05:53 IST Report Abuse

திண்டுக்கல் சரவணன்1 மணி நேரத்துக்கு 1 லட்சம் ? ஹெலிகாப்டரில், பெங்களூர் ஏர்போட்டில் இருந்து எலெக்ரோனிஸ் சிட்டி வர 3000 கட்டணம் என நினைக்கிறேன். யாருக்காக இதை அரசு செயல்படுத்த வேண்டும். எந்த அரசானாலும் பணக்காரர்களுக்கு தான் என்பது இதன் மூலம் மேலும் ஒருமுறை உறுதியாகிறது. பணக்காரர்களுக்கான சேவை என்றால் இதை தனியாருக்கு விட்டுவிடலாம்.

Rate this:
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
11-செப்-201813:35:59 IST Report Abuse

பஞ்ச்மணிஇந்த வசதியை ஏழை மக்கள் பயன்படுத்த மிகவும் சிரமப்படுவார்கள் ஆகவே தயவு கூர்ந்து கொஞ்சம் போல விலையை குறைக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X