மன அழுத்தத்தில் லாலு சிகிச்சை அளிக்க முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மன அழுத்தத்தில் லாலு சிகிச்சை அளிக்க முடிவு

Updated : செப் 11, 2018 | Added : செப் 11, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
லாலுவுக்கு மன அழுத்தம்,  ராஞ்சி மருத்துவமனை,  லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல்,   ஜார்க்கண்ட் , ராஞ்சி மத்திய சிறை, மன அழுத்த சிகிச்சை, லாலு பிரசாத், லாலு ,  ராஷ்ட்ரீய ஜனதா தளம் , 
Lalu depression, Ranji hospital, Lalu Prasad Yadav, animal feed scam, Jharkhand,
Ranchi Central Jail, Lalu Stress Treatment, Lalu Prasad, Lalu, Rashtriya Janata Dal,

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ள, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், மன அழுத்தத்தில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கால்நடை தீவன ஊழல் வழக்கில், தண்டனை விதிக்கப்பட்ட, பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவருமான, லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.உடல்நிலை பாதிக்கப்பட்ட லாலு, சிகிச்சைக் காக ஜாமினில் வெளிவந்தார். லாலுவின் ஜாமின் காலத்தை நீட்டிக்க, கோர்ட் மறுத்தது. இதையடுத்து, சமீபத்தில், ராஞ்சி நீதிமன்றத்தில் சரணடைந்த லாலு, சிறையில் அடைக்கப்பட்டு பின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவமனையில், கொசுக்கடியால், தன்னால் துாங்க முடியவில்லை என்றும், தனி அறை ஒதுக்கும்படியும் லாலு கோரிஇருந்தார். இதையடுத்து, அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம், மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:காயம் காரணமாக, கால் வீங்கியிருப்பதால், லாலு பிரசாத்தால் சரிவர நடமாட முடியவில்லை. இதனால், அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, ராஞ்சியில் உள்ள சிறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில், மனநல மருத்துவரின் உதவியுடன், லாலுவுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.BASKARAN - BANGALORE,இந்தியா
11-செப்-201810:52:26 IST Report Abuse
S.BASKARAN வாய் யில்லா ஜீவன்களின் சாபம் சும்மா விடாது.
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
11-செப்-201810:44:12 IST Report Abuse
madhavan rajan பீகார் மக்களுக்கும், இந்தியாவுக்கும் மன அழுத்தத்தைக் கொடுத்த இந்த ஆளுக்கு மன அழுத்தமா?
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
11-செப்-201809:31:04 IST Report Abuse
rajan பார்த்துப்பா ரொம்ப புடிச்சு அழுத்திடாதீங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X