Delhi court discharges Arvind Kejriwal in defamation case over 'thulla' remark | தொப்பை போலீஸ் வழக்கில் கெஜ்ரிவால் விடுவிப்பு| Dinamalar

தொப்பை போலீஸ் வழக்கில் கெஜ்ரிவால் விடுவிப்பு

Added : செப் 11, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தொப்பை போலீஸ் வழக்கு, கெஜ்ரிவால், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் , முதல்வர் கெஜ்ரிவால், அஜய்குமார் தனேஜா , அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி, 
Kejriwal, Delhi Chief Minister Kejriwal,
Chief Minister of Delhi, CM Kejriwal, Ajay Kumar Dhaneja, Arvind Kejriwal, AAP, aam aadmi,

புதுடில்லி: போலீசாரை துல்லா என லந்தடித்த வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டார்.
டில்லி போலீசாரை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டியும் டில்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்குவதுதொடர்பாக, கடந்த 2016-ம் ஆண்டு 'டிவி' சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த முதல்வர் கெஜ்ரிவால், போலீசார் பற்றி குறிப்பிடும் போது, 'துல்லா' ( தொப்பை போலீஸ்) என்ற வார்த்தையில் லந்தடித்தாக கூறப்படுகிறது.
இது குறித்து அஜய்குமார் தனேஜா என்ற போலீஸ்காரர் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக அவதுாறு வழக்கு தொடர்ந்தார். அதில் இதுமாதிரியான வார்த்தையை கூறி இருப்பது கவலைக்குரியது. அவர் மீது கோர்ட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். , ஜூலை மாதம் நேரில் ஆஜராக, கெஜ்ரிவாலுக்கு, கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டது.

கடந்த இரண்டாண்டுகளாக விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று டில்லி பெருநகர கூடுதல் மாஜிஸ்திரேட் சமர் விஷால் அளித்த தீர்ப்பில், 'அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த பேட்டியில் இவ்வழக்கின் மனுதாரரான அஜய் குமார் தனேஜாவை குறிப்பிட்டு 'துல்லா' என்னும் வார்த்தையை அவர் குறிப்பிடவில்லை. இதனை அவதூறாக பொருள்கொள்ள முடியாது. மனுதாரரின் மனம் காயப்பட்டதாக எந்த சிறப்பான காரணமும் குறிப்பிடப்படவில்லை. இதனை அவதூறு வழக்காக விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து அரவிந்த் கெஜ்ரிவாலை கோர்ட் விடுவிக்கிறது என உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-செப்-201814:03:33 IST Report Abuse
Bhaskaran தொப்பயைக்குறை என்றுசொல்வது நம்நாட்டில் மிகவும் தவறாகப்படுகிறதோ காவலர்கள் மத்தியில்
Rate this:
Share this comment
Cancel
Shanmuga Sundaram - Bangalore,இந்தியா
11-செப்-201813:35:21 IST Report Abuse
Shanmuga Sundaram " என லந்தடித்த" - ???? என்ன தமிழ் ? தினமலர் ஆசிரியரின் தகுதியா இது ?
Rate this:
Share this comment
Cancel
MaRan - chennai,இந்தியா
11-செப்-201810:53:32 IST Report Abuse
MaRan தினமலர் ஒரு தமிழ் நாளிதழ் ,,தூய தமிழில் செய்தியை எதிர்பார்க்கிறோம்,, லந்தடித்த என்ற வாரத்தை மதுரை வட்டார வழக்கு,, தூய தமிழில் கிண்டல் அல்லது, கேலி என்று சொல்லி இருக்கலாம்,, தினமலர் போன்ற நல்ல பாரம்பரியம் மிக்க நாளிதழ்களுக்கு இது அழகல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X