மண் அள்ளும் இயந்திரம் மீது ரயில் மோதி 2 பேர் காயம் இன்ஜின், பெட்டி சேதம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மண் அள்ளும் இயந்திரம் மீது ரயில் மோதி 2 பேர் காயம் இன்ஜின், பெட்டி சேதம் 

Updated : செப் 11, 2018 | Added : செப் 11, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 மண் அள்ளும் இயந்திரம் மீது  ரயில் மோதி 2 பேர் காயம் இன்ஜின், பெட்டி சேதம் 

பழநி: பழநி அருகே ஆளில்லா கிராசிங்கை கடக்க முயன்ற, மண் அள்ளும் இயந்திரம் மீது ரயில் மோதிய விபத்தில் இருவர் காயமடைந்தனர்.

பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல் வழியாக தினமும் திருவனந்தபுரம் - -மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. நேற்று காலை 10:45மணிக்கு பழநியில் இருந்து ரயில் புறப்பட்டு சென்றது.ராமபட்டினம்புதுார் -மாட்டுப்பாதை ஆளில்லா ரயில்வே கிராசிங்கில் ஒரு மண்அள்ளும்இயந்திரம் திடீரென தண்டவாளத்தை கடக்க முயன்றது. ரயில் டிரைவர் வேகத்தை குறைத்தார். இருப்பினும் மண்அள்ளும் இயந்திரம் மீதுமோதி தள்ளிய ரயில் சிறிது தொலைவில் நின்றது.


பாட்டுக்கேட்டதால் விபத்து

அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. மண்அள்ளும் இயந்திரத்தை இயக்கிய டிரைவர் சத்திரப்பட்டியைச் சேர்ந்த ஹரிஷ் குமார்,24, அவருடன்வந்த ராஜு,60, காயமடைந்தனர். ரயிலில் முதல் பெட்டியும், இன்ஜின் அருகே பிரேக் ஷூவும் சேதமடைந்தன. அதனை சரிசெய்தபின் ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது. பழநி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். ஹெட்செட்டை காதில்மாட்டி பாட்டுக்கேட்டபடி ஹரிஷ்குமார் இயந்திரத்தை ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
12-செப்-201807:49:49 IST Report Abuse
 nicolethomson இது எப்பதான் தீருமோ? ஹெட்செட்டை காதில்மாட்டி பாட்டுக்கேட்டபடி ஹரிஷ்குமார் இயந்திரத்தை ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரிந்தது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X