Assam CM calls for implementation of NRC in all states | இந்தியா முழுவதும் என்.ஆர்.சி.: அசாம் முதல்வர் சோனோவால்| Dinamalar

இந்தியா முழுவதும் என்.ஆர்.சி.: அசாம் முதல்வர் சோனோவால்

Added : செப் 11, 2018 | கருத்துகள் (31)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சோனோவால், இந்தியா, என்ஆர்சி, அசாம் முதல்வர் சோனோவால், அசாம்,  சர்பானந்தா சோனோவால் ,  தேசிய குடிமக்கள் வரைவு பட்டியல், முதல்வர் சோனோவால்,
Sonowal, India, NRC, Assam Chief Minister Sonowal, Assam, Sarbananda Sono, National Citizens Draft List, Chief Minister Sonowal,

கவுகாத்தி : அசாமில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பட்டியல் போன்று இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வெளியிட வேண்டும் என அசாம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

வட கிழக்கு மாநிலமான அசாமில் தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பட்டியல் கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டது. இதில் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 40 லட்சம் பேர் விடுபட்டுள்ளனர்.

இந்த 40 லட்சம் பேரும் அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் கூறியது, தேசிய குடிமக்கள் வரைவு பட்டியலை இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நாம் உண்மையான இந்தியர்கள் யார் என்பதும், அந்நிய நாட்டவர் யார் என்பதும் தெரியவரும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jambukalyan - Chennai,இந்தியா
11-செப்-201814:54:50 IST Report Abuse
jambukalyan அசாம் முதல்வர் கருத்து மிகவும் சரியானது - தமிழகத்தில் ஏராளமான இலங்கை மக்களும், காசுமீரில் பாகிஸ்தான் மக்களும், மேற்குவங்கத்தில் பங்களாதேஷ் மக்களும், இது போன்று அந்தந்த மாநிலங்களின் அண்டைநாட்டு மக்களும் அதிக அளவில் திருட்டுத்தனமாக, காங்கிரஸ் கட்சிக்கு கையூட்டல்கள் கொடுத்துவிட்டு, குடியேறி இருக்கலாம். அல்லது UPA கட்சிகள் இவர்களுக்கு விற்றிருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
மாயவரத்தான் - chennai,இந்தியா
11-செப்-201813:31:57 IST Report Abuse
மாயவரத்தான் சென்னையில் நிறைய டீ கடைகளில் வெளி மாநில பையன்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்களா அல்லது பங்காளதேசத்தை சேர்ந்தவர்களா என்று தெரியவில்லை. எந்த டீ குடிக்கும் தமிழனுக்கும் அதை கேட்கும் அக்கறை இல்லை.காவல் துறையும் கேட்பதாக தெரியவில்லை. இந்த நிலை மாறவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
11-செப்-201812:56:34 IST Report Abuse
ரத்தினம் இந்தியாவுக்கு அழிவு பாதை ஆரியர்கள் என்று பொய்யாக சொல்லப்படுபவர்களால் அல்ல. வந்தேறிகளாலும் அந்நிய மதங்களை இங்கு பரப்புபவர்களாலும், அதற்கு ஓட்டுக்காக சப்போர்ட் செய்ப்பவர்களாலும் தான். .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X