Government rules out excise duty cut as petrol, diesel prices hit fresh high | பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது - மத்திய அரசு திட்டவட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது - மத்திய அரசு திட்டவட்டம்

Updated : செப் 11, 2018 | Added : செப் 11, 2018 | கருத்துகள் (60)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பெட்ரோல் டீசல் வரி, மத்திய அரசு, வாட் வரி, மதிப்பு கூட்டு வரி,  நிதி பற்றாக்குறை , ஜிஎஸ்டி, பெட்ரோல் வரி, டீசல் வரி,பெட்ரோலிய பொருட்கள் விலை, 
Petrol Diesel Tax, Central Government, VAT, Value Added Tax, Fiscal Deficit,
GST, petrol taxes, diesel taxes, petroleum products prices,

புதுடில்லி: பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது எனமத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


அதிகரிப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.05 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.13 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,11) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 14 காசுகளும், டீசல் 15 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.



கோரிக்கை

மத்திய அரசு, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 வீதம் உற்பத்தி வரியும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.15.33 வீதம் உற்பத்தி வரி வசூலிக்கிறது. இதுதவிர, மாநில அரசுகள் 'வாட்' எனப்படும் மதிப்பு கூட்டு வரியை வசூலிக்கின்றன.பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு வருகிறது.இதை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.


சரியான தீர்வு அல்ல

இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியது, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை ஒரு ரூபாய் குறைத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதும் சரியான தீர்வு அல்ல. நிதி நிலைமை வலிமை அடைந்தால் மட்டுமே வரி குறைப்பு செய்ய முடியும். அதற்கு வருமான வரி, ஜி.எஸ்.டி. செலுத்துவோர் எண்ணிக்கை உயர வேண்டும்.


சலுகை

மத்திய அரசு ஏற்கனவே ரூ.98 ஆயிரம் கோடிக்கு வருமான வரி சலுகையும், ரூ.80 ஆயிரம் கோடிக்கு ஜி.எஸ்.டி. குறைப்பும் அளித்துள்ளது பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்தபோதிலும், பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. பெட்ரோலிய பொருட்கள் மீது மாநில அரசுகள் 'வாட்' வரி விதிக்கின்றன. அத்துடன், மத்திய அரசின் வரி வருவாயில் 42 சதவீதம் பங்கைப் பெறுகின்றன. இருந்தாலும், மாநில அரசுகளும் 'வாட்' வரியை குறைக்கும் நிலைமையில் இல்லை. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Snake Babu - Salem,இந்தியா
11-செப்-201813:26:46 IST Report Abuse
Snake Babu எந்த கட்சியும் மக்களை காப்பாற்ற இயலாது. பல வருடங்களாக தொழிலுக்காக அரசியலுக்கு வந்தவர்கள் அரசியலால் சாம்பாதித்த பணத்தில் தொழில் தொடங்கியர்வர்கள் தான் கட்சியில் இருக்கிறார்கள். இவர்கள் எப்படி மக்கள் பணி ஆற்றுவார்கள் என்று நினைத்து ஒட்டு போடுகிறீர்கள். வரும் தேர்தல்களில் உங்களில் ஒருவரை உங்க ஊரில் தேர்ந்து எடுங்கள், சுயேச்சை வேட்பாளர்களாக தேர்ந்து எடுத்து பாராளுமன்றம் சட்டமன்றத்துக்கு அனுப்புங்கள்,அவர்கள் தான் ஒரு முதல் மந்திரி, பிரதமரை தேர்ந்து எடுக்க முக்கிய காரணமாக இருக்க வேண்டும், அப்போதுதான் இந்தியா வளரும். அருமை நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
11-செப்-201812:45:21 IST Report Abuse
r.sundaram நீங்கள் வரியை குறைக்கிறீர்களா இல்லையா என்பது அல்ல பிரச்சனை. ஆனால் பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என்பதே பிரச்சனை. இல்லை குறையாவிட்டால், உங்களுக்கு விழும் ஓட்டு குறையும் என்பதை செய்யவும்.
Rate this:
Share this comment
Cancel
THANGARAJ - CHENNAI,இந்தியா
11-செப்-201812:40:43 IST Report Abuse
THANGARAJ பெட்ரோல் / டீசல் விலை குறைப்பதும், ஏற்றுவதும் , எங்கள் (மத்திய அரசு) கட்டுப்பாட்டில் இல்லை. இருந்தாலும், பெட்ரோலிய அமைச்சகத்தை நிர்வகிப்பது நாங்கள் தான்..... ஹாய் ஹாய் ஹாய்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X