பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து மறியல்: சேலம் மாவட்டத்தில் 100க்கு மேற்பட்டோர் கைது| Dinamalar

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து மறியல்: சேலம் மாவட்டத்தில் 100க்கு மேற்பட்டோர் கைது

Added : செப் 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement

சேலம்: பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வை கண்டித்து, மறியல் செய்த இடது சாரிகள், 114 பேர், நேற்று கைது செய்யப்பட்டனர்.
நாடு தழுவிய ஒருநாள் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்துக்கு, இடதுசாரிகள் அழைப்பு விடுத்தன. அதன்படி, சேலம், நாட்டாண்மை கழக கட்டடம் முன் காலை, 11:15 மணியளவில், மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலர் ராமமூர்த்தி தலைமையில், கட்சியினர் திரண்டு, ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கிருந்து, ஊர்வலமாக புறப்பட்டு வந்து, கலெக்டர் அலுவலகம் எதிரே, சாலையில் அமர்ந்து, மறியல் செய்தனர். காஸ் உள்ளிட்ட எரிப்பொருட்களின் விலையை குறைக்கவும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷமிட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங் பேசுகையில், ''பெட்ரோல், டீசல் விலை உயர்வால், எல்லா பொருட்களின் விலைகளும், மறைமுகமாக அதிகரித்து வருகிறது. அதை தடுக்க, துணை போகும் அ.தி.மு.க., அரசையும் கண்டித்து, தொடர்ந்து போராட வேண்டும்,'' என்றார். மறியல் செய்த, 10 பெண்கள் உள்பட, 114 பேரை போலீசார் கைது செய்தனர்.


* சேலம், தலைமை தபால் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ரிக்?ஷா வண்டியில், டூவீலரை ஏற்றிக்கொண்டும், பிச்சை எடுத்தும், சாலையில் சிலிண்டர் மற்றும் மண் அடுப்பை வைத்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகர் மாவட்ட காங்., தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். சேலம், மத்திய மாவட்ட தி.மு.க., செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


* தலைவாசல், மார்க்கெட்டிலிருந்த அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பரபரப்பாக இயங்கும், தினசரி காய்கறி மார்க்கெட்டில், நேற்று வர்த்தகம் நடைபெறாததால், வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு கோடி ரூபாய்க்கும், அதிகளவிலான வர்த்தகம் பாதிப்படைந்தது. தலைவாசல் பஸ் ஸ்டாண்ட், மும்முடி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில், அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


* இடைப்பாடியில், 50 சதவீத கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பள்ளிகள் இயங்கின. பஸ் ஸ்டாண்டில் காங்., நகர தலைவர் நாகராஜன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டணி கட்சியான தி.மு.க.,வினர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


* வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட், தம்மம்பட்டி சாலை, பேளூர் சாலை, மன்னாய்க்கன்பட்டி சாலைகளில், 500க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை அடைக்கப்பட்டிருந்தன. முன்னதாக மாலை, 4:00 மணியளவில், சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அர்த்தனாரி, கிழக்கு மாவட்ட தி.மு.க.,பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா ஆகியோர் முன்னிலையில் பஸ் ஸ்டாண்டில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


* மேட்டூரில், பஸ்கள் வழக்கம் போல ஓடிய போதிலும், 20 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேட்டூர் மின்வாரிய பணிமனை அருகிலுள்ள, பெட்ரோல் முனையம் முன், இடதுசாரி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மொபட்டை பாடையில் கட்டி வைத்தும், மாட்டு வண்டி, காஸ் சிலிண்டரை முன்வைத்தும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட், காங்., வி.சி., உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


* ஓமலூரில், சேலம் மேற்கு மாவட்ட காங்., தலைவர் முருகன் தலைமையில், நடந்த போராட்டத்தில், தி.மு.க.,-வி.சி., கட்சியினர் பங்கேற்றனர். டி.வி.எஸ்.,மொபட்டுக்கு மாலை அணிவித்து, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். பஸ் ஸ்டாண்ட் எதிரே சாலை மறியல் நடத்த முயற்சி செய்தனர். கைது செய்து விடுவோம் என போலீசார் எச்சரிக்கை விடுத்ததால், ஊர்வலமாக சென்று கோஷமிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X