1.5 Lakh Job Cuts May Give Army Rs. 7,000 Crore To Buy Weapons | ராணுவத்தில் 1.5 லட்சம் பணியிடம் குறைக்க திட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராணுவத்தில் 1.5 லட்சம் பணியிடம் குறைக்க திட்டம்

Updated : செப் 11, 2018 | Added : செப் 11, 2018 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ராணுவ பணியிடம், நவீன ஆயுதங்கள், மத்திய பட்ஜெட், ராணுவம், ராணுவ பட்ஜெட், ராணுவ செய்திகள், இந்திய ராணுவம், ராணுவ வேலை வாய்ப்பு , 
Military Work, Modern Weapons, Federal Budget, Army, Military Budget, Military News, Indian Army, Army Job Opportunity,

புதுடில்லி: ராணுவத்தில் 1.5 லட்சம் பணியிடங்களை குறைத்தால், மிச்சமாகும் ரூ. 7 ஆயிரம் கோடியை நவீன ஆயுதங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.


ராணுவ பட்ஜெட்:


மத்திய பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 12.8 லட்சம் கோடியில், 83 சதவீதம் தினசரி செலவுக்கும், வீரர்கள் சம்பளத்திற்கு மட்டும் செலவாகிறது. இதில், ஓய்வூதிய தொகை சேராது. இதற்கு தனியாக பணம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மிச்சமிருக்கும் 17 சதவீத பணம் (ரூ.26,826 கோடி மட்டும் ஆயுதங்கள் பராமரிக்கவும், ராணுவத்தை நவீனபடுத்தவும் செலவிடப்படுகிறது. இது போதுமானதாக இல்லை என ராணுவம் கருதுகிறது.
இதனால் 1.5 லட்சம் பணியிடங்களை குறைத்தால், ரூ.5 ஆயிரம் கோடி- ரூ.7 ஆயிரம் கோடி மிஞ்சும். இதன் மூலம் ஆயுதங்களை பராமரிக்கவும், புதியவை வாங்கவும் ரூ.31,826 கோடி முதல் ரூ.33, 826 கோடி வரை கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
12-செப்-201812:01:47 IST Report Abuse
Jaya Ram நான் நினைக்கிறேன் ஒருவேளை நாங்கள் ராணுவத்தில் ஆட்களை குறைத்துக் கொள்கிறோம் என்று அமெரிக்காவிடம் ஒப்பந்தம் ரகசியமாக போட்டிருப்பார்களோ நாளை இது ரகசிய ஒப்பந்தம் வெளியில் சொல்லக்கூடாது என்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
11-செப்-201817:31:41 IST Report Abuse
Jaya Ram இதைவிட காஷ்மீரினால் நமக்கு என்ன லாபம் ஒன்றுமில்லை சும்மா வீம்புக்கு என்னமோ செய்யுறோம், அதை விடுத்து அந்த பிரிவினை வாதிகளிடம், ஜம்மு லடாக் தவிர்த்து காஷ்மீரினை உங்களுக்கு தருகிறோம் ஆனால் அதற்கு முன்னர் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரினை நீங்கள் பெற்றுவாருங்கள் ஒரு ஒப்பந்தம் மூலம் கொடுக்கிறோம் என்று முடிவெடுங்கள் அங்குள்ள லட்சக்கணக்கான நம்முடைய ராணுவவீரர்களின் உயிர்கள் காப்பாற்றப்படும்
Rate this:
Share this comment
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
11-செப்-201817:15:32 IST Report Abuse
பிரபு ராணுவத்தில் பணியிடம் குறைக்க திட்டம் என்பதே அதிர்ச்சியும் ஆச்சர்யமும் நிறைந்த செய்தியாக இருக்கிறது. இந்தியா மிகப்பரந்த எல்லையை கொண்ட நாடு. சுற்றிலும் எதிரிகளை கொண்ட நாடு. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆட்சியாளர்கள் ராணுவத்திற்கு வாங்கப்படும் தளவாடங்கள், ஆயுதங்களில் ஊழல் செய்யாமலிருந்தாலே மிகப்பெரிய சேமிப்பை செய்ய முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X