பெட்ரோல் விலையை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும்: முதல்வர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் விலையை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும்: முதல்வர்

Added : செப் 11, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பெட்ரோல் விலை, மத்திய அரசு, முதல்வர் பழனிசாமி, மேகதாது விவகாரம், குட்கா ஊழல், பழனிசாமி, இபிஎஸ், தமிழக முதல்வர் பழனிசாமி,மேகதாது புதிய அணை, டீசல் விலை, பெட்ரோல் டீசல் விலை, 
 petrol price , central government, Chief Minister of Palanisamy, Megathadu issue, Gudka scam, Palanisamy, EPS, Tamil Nadu Chief Minister Palanisamy, Megathadu new dam, diesel prices, petrol diesel prices,

சேலம்: பெட்ரோல் விலையை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

சேலத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் நிலை தெளிவாக உள்ளது. மேகதாதுவில் புதிய அணை கட்டப்படக்கூடாது. தமிழகத்தில் வறட்சி நிலவிய காலத்தில் , குடிக்க கூட தண்ணீர் திறக்கவில்லை. புதிய அணை கட்டினால், தமிழகம் பாதிக்கப்படும். இந்த விவகாரத்தை சட்டரீதியாக அணுகுவோம்


குட்கா ஊழல்

ஒருவர் மீது குற்றச்சாட்டு சொல்வதால் மட்டும் அவர், குற்றவாளியாகிவிட மாட்டார். குற்றச்சட்டு நிருபிக்கப்பட்டால் மட்டுமே குற்றவாளி. வேண்டுமென்ற திட்டமிட்டு குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன. தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. பல வகைகளில் அதனை தடை செய்ய பார்த்தனர்.இது முடியாததால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சொல்கின்றனர். தமிழக அரசில் எந்த துறையிலும் தவறு நடந்ததாக தெரியவில்லை.


வரி குறைப்பு

பெட்ரோல் விலையை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும். அவர்கள்தான் உயர்த்துகின்றனர். நிதி ஆதாரத்தை பெருக்குவது தான் தமிழக அரசின்நிலை. அப்போது தான் திட்டங்கள் நிறைவேற்றப்படும். இருப்பினும் வரி குறைத்து யோசனை செய்யப்படும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
12-செப்-201808:27:45 IST Report Abuse
Panneerselvam Chinnasamy மற்ற மாநிலங்கள் VATவரியை குறைத்துள்ளன... அடலீஸ்ட் டீசலுக்காவது குறைத்தால் அத்தியாவசிய பொருட்கள்விலை அதிகம் கூடாது...செய்யுமா எடப்பாடி அரசு?
Rate this:
Share this comment
Cancel
N.Rajagopalan - Chennai,இந்தியா
11-செப்-201817:55:50 IST Report Abuse
N.Rajagopalan தினமலருக்கு ஒரு வேண்டுகோள் .மாநிலவாரியாக வரியில் மத்திய அரசு பெறுவது எவ்வளவு ,மாநிலம் பெறுவது எவ்வளவு என்று ரூபாயில் லிஸ்ட் கொடுத்தால் மாநிலங்களின் குட்டு வெளிப்படும்
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
11-செப்-201816:27:04 IST Report Abuse
ஜெயந்தன் இதை யார் கேட்டது... குட்கா விவகாரத்தை பற்றி மூச்சே காணோமே ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X