தங்க டிபன்பாக்சில் சாப்பிட்ட கொள்ளையன்| Dinamalar

தங்க டிபன்பாக்சில் சாப்பிட்ட கொள்ளையன்

Added : செப் 11, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஐதராபாத்: ஐதராபாத் நிஜாம் அருங்காட்சியகத்தில் தங்கத்தால் ஆன டிபன் பாக்சை கொள்ளையடித்தவர்கள், அதில், உணவருந்தியதாக போலீசார் கூறியுள்ளனர்.


கொள்ளை

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகர் அருங்காட்சியகத்தில் நிஜாம் மன்னர் பயன்படுத்திய ரூ.பல கோடி மதிப்பிலான தங்கம் வைரத்தால் ஆன பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு, சில நாட்களுக்கு முன்னர், 2 கிலோ எடையுள்ள தங்கத்தால் ஆன டிபன்பாக்ஸ் மற்றும் கப் அன் சாசர் திருடு போனது. போலீசார் விசாரணை நடத்தி , மும்பையில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


கைது

போலீசார் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்கள், மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர். இருவரும், அருங்காட்சியகத்தில் இருந்த பழமை வாய்ந்த தங்கத்திலான குரானை கொள்ளையடிக்கவே திட்டமிட்டனர். சென்டிமென்ட் காரணமாக அதனை கொள்ளையடிக்கவில்லை. தங்கத்திலான டிபன்பாக்ஸ், துபாய் சந்தையில் 30 அல்லது 40 கோடி ரூபாய் வரைவிலை போக வாய்ப்பு உள்ளது. கொள்ளையடித்த நாளில் இருந்து கைதாகும் வரை, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், தங்க டிபன் பாக்சில்தான் தினமும் உணவை சாப்பிட்டார். இருவரில் ஒருவர் மீது பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளது. அந்த நபர் தான் இந்த கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
12-செப்-201807:48:42 IST Report Abuse
 nicolethomson போராளிகளோ? எல்லாம் எல்லாத்துக்கும் கிடைக்கணும்
Rate this:
Share this comment
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
11-செப்-201817:28:28 IST Report Abuse
THINAKAREN KARAMANI ஐதராபாத் நிஜாம் மன்னர்கூட இந்த தங்க டிபன் பாக்சில் உணவு சாப்பிட்டு இருக்கமாட்டார். ஆனால் ஒரு கொள்ளையன் மட்டும் தினமும் இந்த தங்க டிபன் பாக்சில் உணவைச் சாப்பிட்டுயிருக்கிறான். இதுதான் ராஜபோக வாழ்க்கை என்பதோ. THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Share this comment
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
11-செப்-201817:26:34 IST Report Abuse
பிரபு அரசியல்வாதிகள் அரசு கஜானாவுல அடிச்சு தங்க தட்டில் சாப்பிடுறாங்க. இந்த திருடன் அருங்காட்சியகத்தில் அடிச்சு தங்க டிபன் பாக்சுல சாப்பிட்டுருக்கான். ஒரு வித்தியாசமும் இல்லை. இவன் மாட்டிகிட்டான், உள்ள போய்ட்டான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X