இந்தியாவின் பலமே இளைஞர்கள்: பிரதமர் மோடி| Dinamalar

இந்தியாவின் பலமே இளைஞர்கள்: பிரதமர் மோடி

Updated : செப் 12, 2018 | Added : செப் 11, 2018 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
இந்தியா, இளைஞர்கள், மோடி

கோவை : சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு கொண்டாட்டம் கோவை குமரகுரு கல்லுாரியில் நேற்று நடந்தது. சென்னை விவேகானந்தர் மடம் நடத்திய இந்த விழாவில் காணொலி காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இங்கு அமர்ந்துள்ள அனைவரின் உற்சாகமும் ஊக்கமும் தான் இந்தியாவின் உண்மையான முகம். நான் உங்களிடமிருந்து வெகுதுாரத்திலிருந்து பேசலாம். ஆனால், உங்கள் முன் நின்று பேசும்போது ஏற்படும் சக்தியை உணர்கிறேன். கல்லுாரிகளிலும், பள்ளிகளிலும் சுவாமி விவேகானந்தரின் உரை பற்றிய போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

நம் நாட்டில் மிக முக்கிய விஷயங்களை நம் இளைஞர்கள் விவாதித்து தீர்வு காண்கின்றனர். இதுபோன்ற விவாதங்களில் பங்கேற்கும் உத்வேகம், நாடு எதிர்கொண்டுள்ள சவால்களையும் எதிர்கொள்ள உதவுகின்றன. இது தான் விவேகானந்தர் நமக்கு அளித்த தத்துவம்.

கோவை கல்லூரியில் நடந்த விழாவில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் மாணவர்களிடம் தமிழில் பேசினார். .


நம்மால் முடியும் :

சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்களை கேட்கும்போது, புதிய சிந்தனைகள் பிறக்கின்றன. சிகாகோ பேச்சு, இந்தியாவுக்கும் இந்தியாவின் சிந்தனைக்கும் கிடைத்த வெற்றி என விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். அப்போது, அந்நிய நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்தது. நாம் ஏழையாக இருந்தோம். சமுதாயம் மிகவும் பின்தங்கியிருந்தது.

சமுதாயத்தில் அநீதிகள் இருந்தன. அந்நிய ஆட்சியாளர்கள், நம்முடைய பழமையான அறிவுசார் விஷயங்களை திரும்பி பார்க்க விடவில்லை. நம் நாட்டு மக்கள் நமது கலாசாரத்தையே பார்க்க விடவில்லை. வழிமுறைகள் அடைக்கப்பட்டன. இந்த சவாலை ஏற்று, விவேகானந்தர் நம்முடைய வேதத்தில் உள்ள தத்துவங்களை உணர்த்தினார். சிகாகோவில் அவர் பேசியபோது, நம்முடைய தன்னம்பிக்கை வழிமுறைகளை உணர்த்தினார். ஆன்மிக தத்துவத்தை உலகுக்கு விளக்கினார். நம் நாட்டுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி, நாட்டின் சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்டார்.

நம்மால் முடியும் முடியும் என்ற தன்னம்பிக்கையை ஒவ்வொரு இளைய சமுதாயத்தினரின் ரத்தத்திலும் ஏற்படுத்தினார். நாட்டுக்கு தன்னம்பிக்கையை மீட்டுக் கொடுத்தார். உன்னை முதலில் நம்பு, நாட்டை நேசிக்க வேண்டும் என்றார். இந்த வார்த்தைகளுடன் இந்தியா முழு தன்னம்பிக்கையுடன் முன்னேறும்.


ஆயுஷ்மான் பாரத் திட்டம் :

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பிறகும் படிப்பறிவு உயர்ந்த போதிலும், இளைஞர்களின் திறன் உயரவில்லை. நமது கல்வி முறை, திறனை வளர்க்கவில்லை. எனவே, இதை கண்டறிந்து அவர்களது திறமையை வளர்க்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைச்சகத்தையே அரசு உருவாக்கி, திறன் மேம்பாட்டுக்கு பாடுபட்டு வருகிறோம். ஒவ்வொரு இளைஞரும் அவரது கனவை நிறைவேற்ற, 'முத்ரா' கடன் திட்டத்தில் இதுவரை, 13 கோடி பேருக்கு கடன் உதவியை அளித்துள்ளது.

சுவாமி விவேகானந்தர், நமது சமுதாய பொருளாதார பிரச்னைகளை பற்றியும் பேசியுள்ளார். சமுதாயத்தில் ஏழையும் ஏழையாக உள்ளவர்களை மேம்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த அடிப்படையில் தான் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த அரசு பாடுபட்டு வருகிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் வங்கி கணக்கு, போஸ்ட் பேங்க் திட்டம் ஏற்படுத்தியுள்ளது.

வீடுகள் இல்லாத ஏழைகளுக்கு வீடு, ஏழைகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் 25ம் தேதி, ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டம் இந்தியா முழுவதும் ஏற்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் 10 கோடி குடும்பத்தினர், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இலவச மருத்துவ சிகிச்சைகளை பெற முடியும். நாட்டில் வறுமையை ஒழிப்பது மட்டுமல்ல, வறுமைக்கான காரணங்களையும் ஒழிப்பது தான் நோக்கம்.

சுவாமி விவேகானந்தரின் வாக்கிற்கு ஏற்ப, நாம் புதிய இந்தியாவை உருவாக்குவோம். நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விவேகானந்தரின் கருத்துக்களை கடைபிடித்து முன்னேற வேண்டும். இவ்வாறு பேசினார்.

சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் துணைத் தலைவர் கவுதமானந்தர், அமைச்சர் பாண்டியராஜன், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியின் தாளாளர் சங்கர் வானவராயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Kannan - Aruppukkottai,இந்தியா
12-செப்-201810:49:48 IST Report Abuse
K.Kannan உங்கள் கட்சியில் இளைஞர்களுக்கு வழி விடவேண்டியதானே ?
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-செப்-201810:43:20 IST Report Abuse
Nallavan Nallavan முதலில் இளைஞர்களை நல்ல முறையில் வழிநடத்த ஏதாவது திட்டம் வைத்துள்ளீர்களா என்பதைத் தெரியப்படுத்தவும் .....
Rate this:
Share this comment
Cancel
JIVAN - Cuddalore District,இந்தியா
12-செப்-201810:41:45 IST Report Abuse
JIVAN உங்களின் பலமே வாய்தான்.... அத தான் இன்னும் ஒருகூட்டம் நம்பிகிட்டு இருக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X