திருத்தப்பட்ட, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருத்தப்பட்ட, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

Added : செப் 11, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ரேஷன் கார்டில், திருத்தங்கள் செய்த பின், 'டூப்ளிகேட்' எனப்படும், மாற்று கார்டுக்கு பதில், இணைய தளத்தில் ஆவணமாக, பதிவிறக்கம் செய்யும் வசதியை, உணவு துறை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில், மத்திய அரசின், 'ஆதார்' விபரங்கள் அடிப்படையில், கையடக்க வடிவில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. அதில், குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை செய்த பின், அரசு, 'இ - சேவை' மையங்களில், மாற்று கார்டுகளை வாங்கி கொள்ளும் வசதி இருந்தது. இதற்கு, 30 ரூபாய் கட்டணம் நிர்ணயித்த நிலையில், சேவை மைய ஊழியர்கள், கூடுதல் பணம் வசூல் செய்வது, இஷ்டத்திற்கு கார்டுகளை அச்சிட்டு தருவது உள்ளிட்ட, முறைகேடுகளில் ஈடுபட்டனர். இதனால், அந்த மையங்களில், மாற்று ரேஷன் கார்டுகள் வழங்குவதை, சில மாதங்களுக்கு முன், உணவுத்துறை நிறுத்தியது. பிழை திருத்தங்கள் செய்வோர், மாற்று கார்டுகளை வழங்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொது வினியோக திட்ட இணையதளம், 'மொபைல் ஆப்' செயலியில், கார்டுதாரர்கள், திருத்தங்கள் செய்யும் முன், பதிவு செய்த மொபைல் போன் எண்ணை குறிப்பிட வேண்டும். பின், அந்த எண்ணிற்கு அனுப்பப்படும், உள்ளீட்டு எண்ணை பதிவிட்டு, விரும்பிய திருத்தங்களை செய்யலாம். பின், அந்த விபரம், மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படும். அதை, இணையதளம் வாயிலாகவே, வட்ட வழங் கல் அலுவலர், உதவி ஆணையர் ஆய்வு செய்து ஒப்புதல் தருவர். தவறான விபரங்கள் இருந்தால் நிராகரிப்பார். அந்த விபரமும், எஸ்.எம்.எஸ்.,சில் அனுப்பப்படும். அதிகாரி ஒப்புதல் அளித்த ஒரு வாரத்திற்குள், சரி செய்த விபரங்கள் இணையதளத்தில், பி.டி.எப்., எனப்படும், கையடக்க ஆவண வடிவத்தில் இருக்கும். அதை, 'பிரின்ட்' எடுத்து, ரேஷன் கார்டு கேட்கும் இடங்களில் சமர்ப்பிக்கலாம். அரசு ஒப்புதல் கிடைத்ததும், ஏற்கனவே இருந்தது போல், மாற்று கார்டுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvakumar - Chennai,இந்தியா
12-செப்-201811:30:21 IST Report Abuse
Selvakumar நான் இதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இணையதளத்தில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற சேவைகளை செய்யலாம். பெயரில் உள்ள பிழைகளையோ அல்லது முகவரியில் உள்ள பிழைகளையோ தற்போது திருத்தம் செய்ய முடியாது. உணவுத்துறையால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் ஏராளமான பிழைகள் உள்ளன. குறிப்பாக ஸ்ரீ என்ற எழுத்து ஸ்ர என்று இருக்கும். முன்பு அதை நாமே சரி செய்யலாம் ஆதார் கார்டினை பதிவேற்றுவதன் மூலம். ஆனால் தற்போது அவ்வசதி நிறுத்தப்பட்டுள்ளது. 1967 சேவை மையத்தில் கேட்டால் AC அலுவலகத்து நேரில் செல்ல வேண்டும் என்கின்றனர். சரி நேரில் சென்றால் கணினியில் கைதேர்ந்த ஊழியர்களால் செய்யப்படுகிறதா என்றால் சந்தேகமே. மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கப் படலாம். குறிப்பாக உச்சரிப்பிற்கு கடினமான பெயர்கள் சரியாக உள்ளீடப் படவேண்டும். நேரில் சென்றால் பின்பு எதற்கு ஆன்லைன்? மற்றும் சேவை மையம். நேரில் சென்றால் லஞ்சத்திற்கே வழிவகுக்கும். மற்றும் தரவிறக்கப்படும் pdf கோப்பில் பெயரிலோ அல்லது முகவரியிலோ ஆங்கில எழுத்து இருந்தால் அது வருவதில்லை உதாரணமான 257 / A என்று இருந்தால் 257 / 􀀀 என்று வருகிறது. இதனால் பல சிக்கல்கள் எழுகிறது. எனவே மீண்டும் பழைய முறையில் உரிய ஆவணத்துடன் ஆன்லைன் மூலம் பிழை திருத்தும் வசதியும், தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் பிடிஎப் கோப்பினை பதிவிறக்கம் செய்யும் வசதியும் தந்து நேரில் அலைக்கழிக்கப்படுவதை தவிர்த்து வெளிப்படைத்தன்மையை பாதுகாக்க வேண்டுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X