தங்க டிபன் பாக்சை எதற்கு திருடினர்? : போலீசாரிடம் திருடர்கள் பரபரப்பு வாக்குமூலம்| Dinamalar

தங்க டிபன் பாக்சை எதற்கு திருடினர்? : போலீசாரிடம் திருடர்கள் பரபரப்பு வாக்குமூலம்

Added : செப் 11, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தங்க டிபன் பாக்சை எதற்கு திருடினர்? : போலீசாரிடம் திருடர்கள் பரபரப்பு வாக்குமூலம்

ஐதராபாத்: 'தெலுங்கானா மாநிலத்தில், நிஜாம் அருங்காட்சியகத்தில் இருந்து, தங்க டிபன் பாக்சை கொள்ளை அடித்தவர்கள், அதில் உணவருந்தி உள்ளனர்' என, போலீசார் தெரிவித்து உள்ளனர்.
நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், ஐதராபாதை தலைமையிடமாக வைத்து, நிஜாம் மன்னர்கள் ஆட்சி செய்தனர். சுதந்திரத்துக்குப் பின், நிஜாம் ஆட்சி ஒழிக்கப்பட்டது. ஐதராபாதில், நிஜாம் அருங்காட்சியகம் உள்ளது. இதில், கடைசி நிஜாமான, மீர் உஸ்மான் அலி கான் அசப் ஜா பயன்படுத்திய விலையுயர்ந்த பொருட்கள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சமீபத்தில், அருங்காட்சியகத்தில் இருந்து, வைரக் கற்கள் பதித்த, மூன்று அடுக்கு தங்க டிபன் பாக்ஸ், டீ கப் ஆகியவை திருடப்பட்டன. இவற்றின் மதிப்பு சர்வதேச சந்தையில், 50 கோடி ரூபாய். இதையடுத்து, திருடர்களை பிடிக்க, 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.இந்நிலையில் நேற்று, மஹாராஷ்டிர மாநில தலைநகர், மும்பையில், தங்க டிபன் பாக்ஸ், டீ கப் ஆகியவற்றை திருடிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து, போலீசார் கூறியதாவது:தங்க டிபன் பாக்ஸ், டீ கப் ஆகியவற்றை திருடியவர்கள், மும்பையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்படி நேற்று, மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில், அவர்களை கைது செய்தோம்.கொள்ளையடித்த நாளில் இருந்து, கைதாகும் வரை, திருடர்களில் ஒருவன், அந்த தங்க டிபன் பாக்சில் தான், தினமும் உணவு சாப்பிட்டதாக வாக்குமூலம் அளித்து உள்ளான்.திருடர்களிடம் இருந்து, அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
12-செப்-201815:51:42 IST Report Abuse
Kasiniventhan Muthuramalingam பாவம் பைத்தியக்கார பசங்க
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
12-செப்-201807:03:39 IST Report Abuse
தேச நேசன் ஒருவேளை தங்க பஸ்பம் சாப்பிட்டது போன்ற பலம் கிடைக்கும் என நினைத்திருப்பர்
Rate this:
Share this comment
Cancel
manivannan - chennai,இந்தியா
12-செப்-201805:50:00 IST Report Abuse
manivannan தங்க டிபன் பாக்ஸ் ஐ எதற்கு திருடினர் என்று சொல்லவேயில்லையே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X