பாஸ்போர்ட் பெற மோசடி : 'மாஜி' எம்.எல்.ஏ., கைது| Dinamalar

பாஸ்போர்ட் பெற மோசடி : 'மாஜி' எம்.எல்.ஏ., கைது

Added : செப் 11, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பாஸ்போர்ட் பெற மோசடி : 'மாஜி' எம்.எல்.ஏ., கைது

ஐதராபாத்: தன் குடும்பத்தாரின் பெயரில், வேறு சிலருக்கு பாஸ்போர்ட் பெற்றுத் தந்து, அவர்களை அமெரிக்கா அழைத்துச் சென்று மோசடி செய்ததாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள், எம்.எல்.ஏ., தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்கா : தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் காபந்து அரசு அமைந்து உள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் இருந்தபோது, செகந்திராபாத் சங்காரெட்டி தொகுதியின்,எம்.எல்.ஏ.,வாக, காங்கிரஸ் கட்சியின் ஜெயபிரகாஷ் ரெட்டி என்ற, ஜக்கா ரெட்டி இருந்தார்.கடந்த, 2004ல், தன் பெயரிலும், தன் மனைவி, மகள், மகன் பெயர்களிலும், பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பித்தார். ஆனால், மனைவி, மகள், மகன் பெயரில், வேறு சிலருக்கு பாஸ்போர்ட் எடுத்து தந்துள்ளார்.பின், ஏஜென்ட் மூலம், 15 லட்சம் ரூபாய் பெற்று, அந்த மூவரையும் தன் குடும்பத்தார் என கூறி, அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளார், ஜெயபிரகாஷ் ரெட்டி. அவர்களை அங்கேயே விட்டு விட்டு, அவர் மட்டும் நாடு திரும்பியுள்ளார்.
போலி ஆவணம் : இந்த மோசடி சமீபத்தில் தெரியவந்தது. இதையடுத்து, முன்னாள், எம்.எல்.ஏ.,வான ஜெயபிரகாஷ் ரெட்டியை, போலீசார், நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.போலியான பெயரில் பாஸ்போர்ட் மற்றும் விசா எடுத்தது, தன், எம்.எல்.ஏ., பதவியை பயன்படுத்தி, போலி ஆவணங்கள் கொடுத்து, 'விசா' பெற்றது போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-செப்-201806:31:22 IST Report Abuse
Bhaskaran காங்கிரஸ் கட்சியினருக்கு இதுபோன்ற வேலை செய்வதெல்லாம் அல்வா சாப்பிடறமாதிரி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X