விபரீதமான விளையாட்டு: இளம்பெண் பலி| Dinamalar

விபரீதமான விளையாட்டு: இளம்பெண் பலி

Added : செப் 11, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
விபரீதமான விளையாட்டு: இளம்பெண் பலி

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், 'ரஷ்யன் ரவுலட்' என்ற ஆபத்தான விளையாட்டை விளையாடிய, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின், 21 வயது மகள், தன்னைத் தானே சுட்டு, தற்கொலை செய்தார்.
'வீடியோ சாட்' : 'ரஷ்யன் ரவுலட்' விளையாட்டு, துப்பாக்கியில் உள்ள ஆறு துளைகளில், ஒரு துளையில் மட்டும், தோட்டாவை செலுத்தி, குழலை சுழற்ற வேண்டும்.அதன்பின், விசையை அழுத்தும் போது, தோட்டா வரவில்லை என்றால், போட்டியாளருக்கு அதிர்ஷ்டம் என, அர்த்தம். ஒருவேளை தோட்டா பாய்ந்தால், போட்டியாளர் இறந்து விடுவார். இது மிகவும் ஆபத்தான விளையாட்டு. மத்திய பிரதேச மாநிலத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர், அரவிந்த யாதவ்; ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி. இவரது மகள், கரிஷ்மா யாதவ், 21.சமீபத்தில், 'ரஷ்யன் ரவுலட்' விளையாட்டை, கரிஷ்மா விளையாடினார். அந்த நேரத்தில், தன் தோழி, நஸ்மாவுடன், 'வீடியோ சாட்' செய்தார்.
விசாரணை : அப்போது, 'துப்பாக்கியில், ஒரு தோட்டா உள்ளது. அது, எங்கே இருக்கிறது என, எனக்கு தெரியாது. அதிர்ஷ்டம் உள்ளதா என பார்ப்போம்' என, நஸ்மாவிடம், கரிஷ்மா கூறி, விசையை அழுத்தினார். இதில், தோட்டா பாய்ந்து, சம்பவ இடத்திலேயே, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்பின், 'வீடியோ சாட்' இணைப்பு துண்டிக்கப் பட்டது.இந்த சம்பவம் குறித்து, நஸ்மாவிடம், போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது, 'ரஷ்யன் ரவுலட்' விளையாட்டை, கரிஷ்மா யாதவ் விளையாடியது தெரிய வந்தது. இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
17-செப்-201816:28:32 IST Report Abuse
Bhagat Singh Dasan இங்க பாஜக எங்க வந்தது??
Rate this:
Share this comment
Cancel
சிந்திப்பவன் - chennai,இந்தியா
14-செப்-201813:29:36 IST Report Abuse
சிந்திப்பவன் அதெல்லாம் சரி ஆனா பூஜை ஆரம்பம் போது சங்கல்ப மந்திரம் மாதிரி அது என்ன "மத்திய பிரதேச மாநிலத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது."என்ற செய்திக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத தகவல்?
Rate this:
Share this comment
Cancel
sudharshana - Aukland ,நியூ சிலாந்து
12-செப்-201805:54:01 IST Report Abuse
sudharshana இந்த காலத்து பெண்கள் சரியானபடி சிந்திக்க கூட தெரியாமல் இருக்கின்றனர். அது சரி துப்பாக்கியை அதிகாரி தம்முடைய பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டாமா ?இல்லை வேறு எதாவது காரணம் இருக்குமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X