'அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்' ; புதிய வீடியோவில் சோக்சி மறுப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
'அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்'
புதிய வீடியோவில் சோக்சி மறுப்பு

புதுடில்லி : வங்கிகளில் கடன் வாங்கி, 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், வெளிநாடு தப்பியுள்ள பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சி, ''என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை; ஜோடிக்கப்பட்டவை,'' என, புதிய வீடியோவில் கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுகள்,பொய்,புதிய வீடியோ,சோக்சி,மறுப்பு


கோரிக்கை :


வங்கிகளில் கடன் வாங்கி, 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக, பிரபல வைர

வியாபாரி, நிரவ் மோடி, அவனது உறவினரான, வைர வியாபாரி மெஹுல் சோக்சி ஆகியோருக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளது.

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற, நிரவ் மோடி, சோக்சி உள்ளிட்டோரை நாடு கடத்தும்படி, சி.பி.ஐ., மூலம் சர்வதேச போலீஸ் அமைப்பான, 'இன்டர்போலுக்கு' கோரிக்கை அனுப்பப்பட்டது. இதில், நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக, 'ரெட் கார்னர் நோட்டீஸ்' கொடுக்கப்பட்டுள்ளது.

'சோக்சிக்கு எதிராகவும், ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக, இன்டர்போலுக்கு நினைவூட்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement

குற்றச்சாட்டு:


இந்நிலையில், அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் இடைப்பட்ட பகுதியில், கரீபியன் தீவுகளில் ஒன்றான, ஆன்டிகுவாவின் குடியுரிமை பெற்று, சோக்சி அங்கு தங்கியுள்ளார்.

நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் கூறியதாவது: என் மீது, அமலாக்கத் துறை கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை; ஆதாரமில்லாதவை. இந்த பொய் வழக்குகளில், சட்டவிரோதமாக என் சொத்துகளை முடக்கியுள்ளனர். இவ்வாறு, வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

ரெட் கார்னர் நோட்டீஸ் அளிக்கப்பட்ட ஒரு நபர், எந்த நாட்டிலிருந்தாலும், அவரை கைது செய்து, உரிய நாட்டிடம் ஒப்படைக்க வேண்டியது, இன்டர்போல் எனப்படும், சர்வதேச போலீசின் பொறுப்பு.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
12-செப்-201811:59:37 IST Report Abuse

தமிழ் மைந்தன் உண்மை உனக்கு தெரியும். ஆனால் சொல்ல ராகுல் அனுமதி வேண்டும்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-செப்-201808:19:28 IST Report Abuse

Srinivasan Kannaiyaகுற்றசாட்டுகள் பொய் என்றால் நீங்கள் ஏன் ஓடி போய் விட்டிர்கள்...

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
12-செப்-201807:48:48 IST Report Abuse

Darmavanஇந்த மாதிரி கருத்து சொல்வதைவிட இவனை திரும்ப கொண்டுவரும் வழி சொன்னால் உதவியாக இருக்கும். இதில் அமலாக்கத்துறையில் கருப்பு ஆடுகள் இருப்பதாக தெரிகிறது

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X