அறிவிக்கப்படாத மின்வெட்டு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அறிவிக்கப்படாத மின்வெட்டு

Added : செப் 11, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை: 'அறிவிக்கப்படாத மின் வெட்டை, உடனடியாக கைவிட வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
அவரது நேற்றைய அறிக்கை: மின் வாரியத்தில் நடந்துள்ள ஊழல்கள், முறைகேடுகள் காரணமாக, ஆங்காங்கே, அறிவிக்கப்படாத மின் வெட்டு, அமலுக்கு வந்துள்ள தகவல், அதிர்ச்சி அளிக்கிறது. அ.தி.மு.க., ஆட்சியில், மின் துறை அமைச்சர் தங்கமணியின் நிர்வாகம், அலங்கோலமாக மாறியுள்ளது. மின் பகிர்மான கழகத்தில், தரமற்ற நிலக்கரியை வாங்கியதில், 12 ஆயிரத்து, 250 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு; அதிக விலை கொடுத்து, தனியார் கம்பெனிகளிடம், மின்சாரம் கொள்முதல் செய்ததில் ஊழல் என, நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்கிறது.இதனால், மின் உற்பத்தியிலும், தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. தேவைப்படும், 13 ஆயிரத்து, 260 மெகா வாட் மின்சாரத்தில், தற்போது, 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தான் கிடைக்கிறது. பற்றாக்குறையை போக்க, 1,600 மெகாவாட் மின்சாரம், கொள்முதல் செய்யப்படுகிறது. இன்னும், 1,500 மெகாவாட் மின்சாரம், பற்றாக்குறை உள்ளது. இதனால், விரைவில் கடுமையான மின்வெட்டை சந்திக்கும், அபாயகரமான நிலைக்கு, தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அறிவிக்கப்படாத மின் வெட்டை, உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
கருணாநிதி சிலையை பார்வையிட்டார் : சென்னை, அறிவாலயத்தில் அமைக்கப்பட உள்ள, கருணாநிதி சிலையை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று பார்வையிட்டார்.தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், கருணாநிதிக்கு, முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்த, சிற்பி தீனதயாளன், சிலையை உருவாக்கி வருகிறார். ஸ்டாலின் நேற்று மீஞ்சூர் சென்று, சிலை வடிவமைப்பு பணிகளை பார்வையிட்டார். சிலை திறப்பு தேதி, இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிரபு - மதுரை,இந்தியா
12-செப்-201814:54:45 IST Report Abuse
பிரபு "தமிழ் நாட்டில் மின் வெட்டு அறவே இல்லை, தமிழ் நாடு மின் மிகை மாநிலமாக திகழ்கிறது" - தூக்கத்துல இருந்தாலும் நமது மின்சாரத்துறை அமைச்சர் இப்படித்தான் சொல்லுவாரு. மதுரையின் சுற்றுப்புற ஊர்களில் கடந்த ஒருவாரமா மணிக்கு ஒருமுறை மின் வெட்டு இருக்கு. ராத்திரிக்கு தூங்க கூட முடியல. ஒரே கொசுக்கடி. என்ன செய்ய? "தமிழ் நாட்டில் மின் வெட்டு அறவே இல்லை" - இன்னமும் இதுதான் என் காதுலேயும் கேக்குது.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-செப்-201808:34:31 IST Report Abuse
Srinivasan Kannaiya என்ன செய்வது சட்டியில் இல்லையே...
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12-செப்-201802:28:53 IST Report Abuse
Mani . V ஸ்டாலின்., தலைவர் (முன்னாள் செயல்படாத செயல் தலைவர்): "அறிவிக்கப்படாத மின் வெட்டை, உடனடியாக கை விட்டு விட்டு, அறிவிப்பு செய்து விட்டு மின் வெட்டு செய்யவும்".
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X