மன நோயாளிகளுக்காக 32 சிறப்பு வாகனம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மன நோயாளிகளுக்காக 32 சிறப்பு வாகனம்

Added : செப் 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ''தமிழகத்தில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக, 32 சிறப்பு மருத்துவ வாகனம் வாங்கப்படும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை, கீழ்ப்பாக்கம், மனநல மருத்துவமனையில், நேற்று நடந்தது. அப்போது, மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ள, '104' மருத்துவ சேவையின், தற்கொலை தடுப்பு காப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்பை, அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:அனைத்து மாவட்டங்களிலும், முன்பயண திட்ட முறையில், மனநல மருத்துவர்கள், குறிப்பிட்ட சில மருத்துவமனைகளுக்கு, குறிப்பிட்ட நாட்களில் சென்று, மன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பர். இதற்காக, மனநல மருத்துவர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, 2.34 கோடி ரூபாய் செலவில், மனநல கிளினிக் ஏற்படுத்தப்படும்.மனநலம் பாதிக்கப்பட்டோர் மருத்துவ சேவைக்காக, மாவட்டத்திற்கு ஒன்று வீதம், 32 சிறப்பு வாகனங்கள், 96 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.இவ்வாறு, விஜயபாஸ்கர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X